நடிகர் விஜய் முத்து தமிழ் சினிமாவில் கவனிக்கத்தக்க ஒரு நடிகராக வளர்ந்து வருகிறார். முண்டாசுப்பட்டி, விக்ரம் வேதா, துணிவு, மகான் என கவனிக்கத்தக்க திரைப்படங்களில் சிறு கதாபாத்திரங்களில் நடித்து நல்ல ஒரு பெயரை பெற்றிருக்கிறார் நடிகர் விஜய் முத்து.
சமீபத்தில் சென்சேஷனல் ஹிட் அடித்த மலையாள திரைப்படமான மஞ்சும்மேல் பாய்ஸ் படத்தில் இன்ஸ்பெக்டராக கவனம் ஈர்த்தார். இந்தப் படத்தை பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் விஜய்முத்துவை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார். அவரின் பாராட்டு தனக்கு ஊக்கத்தையும், கூடுதல் பொறுப்பையும் அளித்துள்ளதாக விஜய் முத்து தெரிவித்துள்ளார்.