‘பெட்டி’ (PEDDI) படத்தில் இதுவரை காணாத மிரட்டலான தோற்றத்தில் ராம்சரண்!

குளோபல் ராம் சரண் தனது அடுத்த பான்-இந்தியா படமான பெட்டி மூலம் ரசிகர்களை மகிழ்விக்க தயாராகி இருக்கிறார். ஏற்கனவே இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் க்ளிம்ப்ஸ் நாடு முழுவதும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறது. தேசிய விருது பெற்ற இயக்குனர் புச்சி பாபு சனா இயக்கும் இந்த பிரமாண்ட படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் சுகுமார் ரைட்டிங்ஸ் வழங்க, விருத்தி சினிமாஸ் சார்பில் வெங்கட சதீஷ் கிலாரு தயாரிக்கிறார்.

பெட்டி படத்தின் மூலம் ஒரு ஒரு மிகச் சிறப்பான திரை அனுபவத்தை வழங்க படக்குழு கடுமையாக உழைத்து வருகிறது. கலை இயக்குனர் அவினாஷ் கொல்லா மற்றும் குழுவினர் உருவாக்கியுள்ள மிகப்பெரிய கிராமத்து செட் ஒன்றில் படத்தின் மிக முக்கிய சண்டைக் காட்சி மற்றும் மிக முக்கியமான உரையாடல் காட்சிகளை படமாக்குகிறார்கள். ஏற்கனவே 30% படப்பிடிப்பு முடிந்திருக்கிறது. அடுத்த கட்ட படப்பிடிப்பில் ஒரு பெரும் பகுதியை முடிக்க திட்டமிட்டிருக்கிறார்கள்.

நீண்ட தலைமுடி, அடர்த்தியான தாடி மற்றும் மூக்குத்தி என ராவான ஒரு கிராமத்து இளைஞர் கதாபாத்திரத்தில் ராம் சரண் ஒரு வித்தியாசமான தோற்றத்தில் வருகிறார். ஜான்வி கபூர் கதாநாயகியாகவும், சிவராஜ்குமார், ஜெகபதி பாபு மற்றும் திவ்யேந்து ஷர்மா ஆகியோர் மற்ற முக்கிய நடிகர்களாகவும் உள்ளனர்.

ரத்னவேலு ஒளிப்பதிவு செய்ய, ஆஸ்கர் நாயகன் இசையமைப்பாளர் ஏ. ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். நவீன் நூலி எடிட்டிங்கையும், அவினாஷ் கொல்லா கலை இயக்கத்தையும் கவனிக்கிறார்கள். இப்படம் ராம் சரண் பிறந்த நாளான மார்ச் 27,2026 அன்று திரைக்கு வரவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *