Hansa Entertainment தயாரிப்பில் 3 மொழிகளில் உருவாகும் OTT சீரிஸ்கள்!

விஜயதசமி நன்னாளான அக்டோபர் 20, 2026 அன்று, ஹன்சா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தனது புதிய படைப்புத் திட்டங்களை அறிவித்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கப்பட்ட இந்நிறுவனம், ஆறு மாதங்களுக்குள் பொழுதுபோக்குத் துறையில் தனது செயல்பாடுகளை விரிவுபடுத்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மூன்று மொழிகளில் முக்கிய OTT தளங்களுடன் இணைந்து சீரிஸ்கள் மற்றும் குறுந்தொடர்களைத் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளது.

தரமான கதைகளைத் தேர்ந்தெடுத்து, அவற்றைச் சிறந்த படைப்புகளாகப் பார்வையாளர்களிடம் கொண்டு சேர்ப்பதே இந்நிறுவனத்தின் முக்கிய நோக்கமாகும். இதற்கான தயாரிப்புப் பணிகளை அக்டோபர், நவம்பர் மாதங்களில் தொடங்கத் திட்டமிட்டுள்ளதுடன், ஒரே நேரத்தில் பல படைப்புகளை உருவாக்கும் வகையில் தனது குழுவையும் விரிவுபடுத்தியுள்ளது.

இது குறித்து ஹன்சா என்டர்டெயின்மென்ட் இயக்குநர் ஸ்ருதி சுவாமி கூறுகையில், “பொழுதுபோக்குத் துறையின் எதிர்காலம் என்பது படைப்பாற்றல், பார்வையாளர்களைப் பற்றிய புரிதல், வளர்ந்து வரும் தொழில்நுட்பம் ஆகியவை ஒன்றிணைவதில் இருக்கிறது. புதுமையான கதைகள், பல்வேறு ஜானர்கள், திறமையான படைப்பாளிகளுடனான கூட்டணி ஆகியவற்றின் மூலம் வலுவான கன்டென்ட் நிறுவனத்தை உருவாக்குவதே எங்களின் நீண்டகால நோக்கம். மொழி, கலாசாரம் ஆகிய எல்லைகளைக் கடந்து அனைத்து தரப்பு மக்களையும் சென்றடையும் கதைகளை உருவாக்க விரும்புகிறோம்” என்றார்.

ஹன்சா என்டர்டெயின்மென்ட் இயக்குநர் சித்தார்த் சுவாமி கூறுகையில், “நிறுவனம் தொடங்கிய சில மாதங்களிலேயே பெரிய அளவிலான சீரிஸ்கள் தயாரிப்பில் எங்களால் வலுவாகக் கால் பதிக்க முடிந்துள்ளது. ஹன்சா விஷன் பல ஆண்டுகளாக உருவாக்கிய நற்பெயரும், திரைத்துறையில் எங்களுக்கு இருக்கும் நல்ல உறவுகளும் இதற்குப் பக்கபலமாக உள்ளன.

குறுகிய காலத்தில் எங்கள் குழுவை விரிவுபடுத்தியுள்ளோம். OTT தளங்களின் தேவைகளுக்கு ஏற்ப, ஒரே நேரத்தில் பல தயாரிப்புகளை மேற்கொள்ளும் திறனையும் வளர்த்துள்ளோம். பல படைப்புகளை உருவாக்கினாலும், ஒவ்வொன்றின் தரத்தையும் தக்கவைத்து, திட்டமிட்ட காலத்திற்குள் பணிகளை நிறைவு செய்வதே எங்களின் இலக்கு” என்றார்.

நான்கு திரைப்படங்களுடன் களமிறங்கும் ஹன்சா என்டர்டெயின்மென்ட்!

சீரிஸ்கள் தயாரிப்புடன் மட்டுமின்றி, திரைப்படத் தயாரிப்பிலும் ஹன்சா என்டர்டெயின்மென்ட் தீவிரமாக இறங்கியுள்ளது. நிறுவனத்தின் CEO சுஜாதா நாராயணன் வெளியிட்டுள்ள தகவலின்படி, முதல் கட்டமாக நான்கு திரைப்படக் கதைகள் தயாராக உள்ளன. இதில் ஒரு மலையாளப் படமும், மூன்று தமிழ்ப் படங்களும் இடம்பெற்றுள்ளன. இந்தக் கதைகளைப் பிற மொழிகளிலும் உருவாக்குவதற்கான வாய்ப்புகளும் உள்ளன.

உள்ளூர் மண் சார்ந்த கதைகள், நமக்குப் பரிச்சயமான மனிதர்கள் மற்றும் அவர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு, அதே நேரத்தில் பல்வேறு மொழிகளைச் சேர்ந்த ரசிகர்களையும் கவரும் வகையில் இப்படங்களை உருவாக்கத் திட்டமிட்டுள்ளனர். இப்படங்களுக்காக அணுகப்பட்ட நடிகர்கள் மற்றும் நட்சத்திரங்களிடமிருந்து நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாகவும், அடுத்தகட்டப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த நான்கு படங்களில் இரண்டு படங்களுக்கான முன்தயாரிப்புப் பணிகள் டிசம்பர் 2026 முதல் தொடங்கவுள்ளன.

ஹன்சா என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் முதல் நான்கு திரைப்படங்கள்:

1. மலையாளப் படம் – காமெடி டிராமா

இளம் வயதினரின் வாழ்க்கை மற்றும் உறவுகளை மையமாகக் கொண்ட இந்தப் படத்தை இந்து வி.எஸ். எழுதி இயக்குகிறார் / IMDB link: https://www.imdb.com/name/nm12034310 ]

2. தமிழ் – இன்வெஸ்டிகேட்டிவ் த்ரில்லர்

விசாரணையை மையமாகக் கொண்ட இந்தத் திரைப்படத்தின் கதையை சர்ஜுன் கே.எம். மற்றும் ஸ்ரீஹரி ஜெகநாதன் இணைந்து எழுத சர்ஜுன் கே.எம்.  எழுதி இயக்குகிறார் ./ IMDB link: https://www.imdb.com/name/nm9543933

3. தமிழ் – ஸ்போர்ட்ஸ் டிராமா

விளையாட்டை மையமாகக் கொண்ட இந்தப் படத்தை அருண்பிரகாஷ் எழுதி இயக்குகிறார். இது அவர் இயக்கும் முதல் திரைப்படமாகும்.

4. தமிழ் – காமெடி டிராமா

இன்றைய இளம் தலைமுறையினரின் வாழ்க்கையை மையமாகக் கொண்ட இந்தப் படத்தை விக்ரம் ஸ்ரீதரன் எழுதி இயக்குகிறார் / IMDB link: https://www.imdb.com/name/nm14930400/?ref_=ext_shr_wts )

இந்த நான்கு படங்களும் வெவ்வேறு கதைக்களங்களையும் தனித்துவமான அணுகுமுறைகளையும் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிராண்டுகளுக்கான புதிய கன்டென்ட் முயற்சிகள்!

திரைப்படங்கள் மற்றும் சீரிஸ்கள் மட்டுமின்றி, பிராண்டுகளுக்கான கன்டென்ட் தயாரிப்பிலும் ஹன்சா என்டர்டெயின்மென்ட் பல்வேறு புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. தொலைக்காட்சி விளம்பரங்கள், செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் உதவியுடன் உருவாக்கப்படும் விளம்பரங்கள், பிராண்ட் ஃபிலிம்கள் மற்றும் மொபைல் பார்வைக்காக பிரத்யேகமாக உருவாக்கப்படும் வெர்ட்டிக்கல் டிராமாக்கள் எனப் பல்வேறு வகையான படைப்புகளை உருவாக்கி வருகிறது.

வலுவான நிறுவனமாக உருவெடுக்கும் இலக்கு!

R K SWAMY HANSA குழுமத்தின் தலைவர் சீனிவாசன் சுவாமியின் வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனையுடன் ஹன்சா என்டர்டெயின்மென்ட் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.

இதுகுறித்து சீனிவாசன் சுவாமி கூறுகையில், “ஹன்சா என்டர்டெயின்மென்ட் குழுவினரின் ஆர்வமும் உற்சாகமும் மகிழ்ச்சியளிக்கிறது. இந்த உற்சாகம் OTT தளங்கள், எழுத்தாளர்கள், முக்கியத் தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் நடிகர்களுடன் வலுவான உறவுகளை உருவாக்க உதவும். அவர்களுடன் இணைந்து பணியாற்றுவதன் மூலம், இன்னும் சில ஆண்டுகளில் பொழுதுபோக்குத் துறையில் வலுவான நிறுவனமாக ஹன்சா என்டர்டெயின்மென்ட் உருவெடுக்கும் என நம்புகிறேன்” என்றார்.

திரைப்படங்கள், டிஜிட்டல் சீரிஸ்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் பிராண்டுகளுக்கான பல்வேறு கன்டென்ட் படைப்புகளை உருவாக்கும் நிறுவனமாகச் செயல்பட்டு வரும் ஹன்சா என்டர்டெயின்மென்ட், படைப்பாற்றல், தொழில்நுட்பம் மற்றும் பார்வையாளர்களின் ஈடுபாடு ஆகியவற்றை ஒருங்கிணைத்து, தரமான பொழுதுபோக்குப் படைப்புகளை உருவாக்குவதில் கவனம் செலுத்தி வருகிறது.

மூன்று மொழிகளில் சீரிஸ்கள், நான்கு திரைப்படத் திட்டங்கள் மற்றும் பிராண்டுகளுக்கான புதிய கன்டென்ட் முயற்சிகள் எனப் பல்வேறு தளங்களில் தனது செயல்பாடுகளை விரிவுபடுத்தி வரும் ஹன்சா என்டர்டெயின்மென்ட், இந்தியப் பொழுதுபோக்குத் துறையில் தனக்கென வலுவான இடத்தை உருவாக்கும் நோக்கில் அடுத்தகட்டப் பயணத்தைத் தொடங்கியுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *