Boonie Bears: The Hidden Protector – விமர்சனம்!

தமிழ் ரசிகர்கள் கடந்த 20 ஆண்டுகளில் பல்வேறு வெளிநாட்டு அனிமேஷன் திரைப்படங்களை பார்த்து ரசித்திருக்கிறோம். குங்ஃபூ பாண்டா, ஐஸ் ஏஜ், ஜூட்டோப்பியா, மடகாஸ்கர் என குழந்தைகளுடன் சேர்ந்து பல படங்களை ரசிகர்கள் குடும்பத்தோடு ரசித்திருக்கிறார்கள். அந்த வகையில் தற்போது சீனாவின் பிரபலமான அனிமேஷன் தொடரான Boonie Bears வரிசையின் 12-வது திரைப்படமாக உருவாகியுள்ளது “Boonie Bears: The Hidden Protector”.

படத்தின் கதைப்படி, பிரையர், பிராம்பிள் மற்றும் விக் ஆகியோருக்கு மர்மமான சக்திகள் கிடைக்க, அந்த சக்திகள் அவர்களை மனிதர்களும் மாய உயிரினங்களும் வாழும் புதிய உலகுக்கு அழைத்துச் செல்கின்றன. அங்கு ஒரு பெரும் ஆபத்து அந்த உலகை சூழ்கிறது. அந்த பேராபத்தை தடுக்க அவர்கள் எடுக்கும் முயற்சிகளும், சாகசப் பயணமுமே படத்தின் மீதிக்கதை.

அனிமேஷன் படங்கள் என்றாலே தொழில்நுட்பங்களையும் தாண்டி அதன் மையக்கதாபாத்திரங்களும் காட்சிகளும் கற்பனை உலகை வடிவமைக்கும் விதமும் மைய எமோஷனும் மிக மிக முக்கியமான அம்சங்கள். அந்த வகையில் இந்த படத்திலும் அதனை அம்சங்களுடன் சேர்த்து ஆக்‌ஷன் சாகச காட்சிகளும் மிக மிக ரசிக்க வைக்கிறது.

தமிழ் டப்பிங்கை பொறுத்தவரை விக், பிரியர், பிராம்பிள், ஓல்ட் யின் உட்பட எல்லா கதாபாத்திரங்களுக்கும் டப்பிங் மிக அழகாகவும், எண்டர்டெயினிங் ஆகவும் அமைந்திருக்கிறது. தமிழுக்கு ஏற்ப சில வசனங்களையும் சேர்த்தது ரசிகர்களை இன்னும் சிரிக்க ரசிக்க வைக்கிறது.

சீன புராணக் கதைகளை படத்தில் சொல்லியிருப்பதும் சிறப்பு. காமெடி, ஆக்‌ஷன், எமோஷன் என அத்தனை அம்சங்களையும் சரிவிகிதத்தில் கலந்து விசுவல் டிரீட்டாக கொடுத்திருக்கிறார்கள். அனிமேஷன் படமானாலும் குடும்ப உறவுகளை மிக மிக வலியுறுத்தும் ஒரு படமாகவும் அமைந்திருக்கிறது. இசையும் படத்துக்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறது.

சீன பாரம்பரிய நாட்டுப்புறக் கதைகள், ஆக்‌ஷன், எமோஷன் ஆகியவற்றை கலந்து ரசிகர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தை கொடுத்திருக்கிறது. மொத்தத்தில், “Boonie Bears: The Hidden Protector” குழந்தைகளுடன் சேர்ந்து குடும்பமாக ரசிக்க ஏற்ற ஓரு அனிமேஷன் திரைப்படம். நிச்சயம் 3டியில் பார்த்து ரசிக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *