நாகத்தை மையமாக வைத்து உருவான படங்கள் எல்லாமே ஹிட் – தாணு பேச்சு!

புராணக் கதைகள், மர்மங்கள் மற்றும் பிரம்மாண்டமான ஆக்சன் காட்சிகளின் கலவையாக உருவாகியுள்ள பான்-இந்தியா திரைப்படம் “நாகபந்தம்”. இயக்குநர் அபிஷேக் நாமா இயக்கத்தில், இளம் நடிகர் விராட் கர்ணா கதாநாயகனாக நடிக்கும் இப்படம், இந்திய சினிமாவில் இதுவரை இல்லாத அளவிலான காட்சியமைப்புகள் மற்றும் தொழில்நுட்ப பிரம்மாண்டத்துடன் உருவாகியுள்ளது. வரும் ஜூலை 3 ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் பத்திரிககையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் படக்குழுவினர் கலந்து கொண்டு, படத்தை உருவாக்கிய பயணம், பிரம்மாண்டமான தயாரிப்பு அம்சங்கள், மிதாலஜிக்கல் உலகத்தின் தனித்துவம் மற்றும் ரசிகர்களுக்காக காத்திருக்கும் திரை அனுபவம் குறித்து படக்குழு பகிர்ந்து கொண்டனர்.

கலைப்புலி எஸ். தாணு பேசியதாவது, “நாகபந்தம் படத்தின் காட்சிகளைப் பார்த்தபோது, மிகப்பெரிய பிரம்மாண்டம் கண்ணெதிரே தோன்றியது. படத்தின் ஒவ்வொரு காட்சியும் அதன் உழைப்பையும், தரத்தையும் வெளிப்படுத்துகிறது. இந்த விழாவில் கலந்து கொண்டிருக்கும் பத்திரிககை, ஊடக நண்பர்கள் மற்றும் திரையுலக நண்பர்கள் அனைவருக்கும் எனது அன்பான வணக்கங்கள். தயாரிப்பாளர் அபிஷேக் நாமா அவர்கள் இந்தப் படத்தை மிகுந்த அர்ப்பணிப்புடன் உருவாக்கியிருக்கிறார். அவருடன் எனக்கு நீண்டகால நட்பு உள்ளது. அன்பின் காரணமாகவே என் வேலைகளை ஒதுக்கிவிட்டு இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்திருக்கிறேன்.

ஒரு சிறிய சம்பவத்தை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். பல ஆண்டுகளுக்கு முன்பு நான் வெளியிட்ட ‘அமுதவல்லி’ திரைப்படத்தின் விளம்பரத்தில், ஒரு நாகப்பாம்பு, ஒரு குழந்தை மற்றும் ‘பாம்பு குழந்தையை கொஞ்ச வருகிறதா ? கொத்த வருகிறதா ?’ என்ற ஒரு வரி வாசகம் மட்டுமே இடம்பெற்றிருந்தது. அந்த விளம்பரம் மக்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி, படம் மாபெரும் வெற்றியைப் பெற்றது.

நாகம் என்றாலே மக்களிடையே ஒரு தனி ஈர்ப்பும், நம்பிக்கையும், ஆன்மீகத் தொடர்பும் இருக்கிறது. நாகத்தை மையமாக வைத்து உருவான பல படங்கள் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. நாகக் கன்னிகை, நாக தேவதை கதைகள் முதல் பல படைப்புகள் வரை, நாகத்தின் மீது மக்களுக்கு எப்போதும் ஒரு தனிப்பட்ட ஈர்ப்பு உள்ளது.

அந்த வகையில், ‘நாகபந்தம்’ திரைப்படமும் மிகப்பெரிய வெற்றியைப் பெறும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. இந்தப் படத்தின் குழுவினருக்கு என் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். படம் மாபெரும் வெற்றியடைய வாழ்த்துகிறேன். நன்றி, வணக்கம்.”

தயாரிப்பாளர் ஏ எம் ரத்னம் பேசியதாவது, “தொழில்நுட்பம் மாறிக்கொண்டே இருக்கும் நிலையில், சினிமாவும் தொடர்ந்து புதிய பரிமாணங்களை நோக்கி பயணித்து வருகிறது. குறிப்பாக டிஜிட்டல் மீடியாவின் வருகைக்குப் பிறகு, மக்கள் திரையரங்குகளுக்கு வருவது குறைந்துள்ளது. ஆனால் சில திரைப்படங்கள் மட்டுமே ‘இதை கண்டிப்பாக திரையரங்கில் பார்த்தால்தான் முழு அனுபவம் கிடைக்கும்’ என்ற உணர்வை ஏற்படுத்துகின்றன. அந்த வகையில் ‘நாகபந்தம்’ திரைப்படம் நிச்சயமாக இருக்கும்.

இந்தப் படத்தின் காட்சிப் பிரம்மாண்டம் மிகப்பெரியது. இதை சிறிய திரையில் பார்ப்பதை விட, பெரிய திரையில் பார்த்தால்தான் அதன் முழு தாக்கத்தையும் உணர முடியும். ‘நாகபந்தம்’ என்ற தலைப்பைப் பார்த்தவுடனேயே எனக்கு திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவிலின் மர்ம அறைகள் நினைவுக்கு வந்தன. குறிப்பாக இன்னும் திறக்கப்படாத அந்தப் புகழ்பெற்ற ‘நாகபந்தம்’ அறை குறித்து மக்கள் மத்தியில் எப்போதும் ஒரு ஆவலும் மர்மமும் இருந்து வருகிறது. அந்த பெயரே இந்தப் படத்தின் மீது தனி ஆர்வத்தை உருவாக்குகிறது.

இந்தப் படத்தின் முழுக் கதை எனக்கு தெரியாது. ஆனால் டிரெய்லர் மற்றும் காட்சிகளைப் பார்க்கும்போது, வரலாறு, மர்மம் மற்றும் சாகசம் கலந்த ஒரு பிரம்மாண்டமான திரை அனுபவமாக இது இருக்கும் என்று தோன்றுகிறது.

தாணு சார் சொன்னது போல, நாகத்தை மையமாகக் கொண்ட பல திரைப்படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. நாகம், நாகக் கன்னிகை, நாகபந்தம் போன்ற தலைப்புகளுக்கே ஒரு தனி ஈர்ப்பு இருக்கிறது. அதேபோல் இந்த ‘நாகபந்தம்’ திரைப்படமும் மிகப்பெரிய வெற்றியைப் பெறும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

இயக்குநர் அபிஷேக் நாமா இந்தப் படத்திற்கு மிகப்பெரிய காட்சிப் பிரம்மாண்டத்தை வழங்கியிருக்கிறார். அவருடைய உழைப்பும் அர்ப்பணிப்பும் திரையில் தெளிவாக தெரிகிறது. இந்தப் படத்தில் பணியாற்றிய ஹீரோ, ஹீரோயின்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்.

நடிகர் அஜய் ரத்னம் பேசியதாவது, “‘நாகபந்தம்’ திரைப்படத்தின் இந்த நிகழ்வில் கலந்து கொள்வது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்தப் படத்திற்கு தமிழ் சினிமாவின் இரண்டு முக்கிய ஆளுமைகளான கலைப்புலி எஸ். தாணு சார் மற்றும் ஏ எம் ரத்னம் சார் ஆகியோரின் வாழ்த்துகளும் ஆசீர்வாதங்களும் கிடைத்திருப்பது மிகப்பெரிய விஷயம்.

கலைப்புலி தாணு சார் பகிர்ந்த அனுபவங்கள் மிகவும் சுவாரஸ்யமானவை. நாகத்தை மையமாகக் கொண்ட கதைகள் மற்றும் திரைப்படங்கள் எப்போதும் மக்களிடம் தனி வரவேற்பைப் பெற்றுள்ளன. சிவபெருமானுடன் தொடர்புடைய நாகம் என்றாலே மக்களிடம் ஒரு தனி ஈர்ப்பும் நம்பிக்கையும் இருக்கிறது. அந்த வகையில் ‘நாகபந்தம்’ திரைப்படமும் மிகப்பெரிய வெற்றியைப் பெறும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

இயக்குநர் அபிஷேக் நாமா பற்றி பேச வேண்டும். அவர் வெறும் இயக்குநர் மட்டுமல்ல. சினிமாவிற்கு முதலில் விநியோகஸ்தராக வந்து, பல இந்திய மற்றும் தெலுங்கு திரைப்படங்களை வெளியிட்டவர். ஒரு படம் ஏன் வெற்றி பெறுகிறது, ஏன் தோல்வியடைகிறது என்பதை ஆழமாக ஆராய்ந்த அனுபவம் அவருக்கு இருக்கிறது. அதன் பிறகு தயாரிப்பாளராக பல படங்களை உருவாக்கினார். இன்று இயக்குநராக இந்தப் படத்தை உருவாக்கியுள்ளார். இத்தனை ஆண்டுகளாக அவர் பெற்ற அனுபவத்தின் மொத்த வெளிப்பாடாகவே ‘நாகபந்தம்’ உருவாகியுள்ளது.

நாயகன் விராட் கர்ணா இந்தப் படத்திற்காக மிகுந்த அர்ப்பணிப்புடன் உழைத்திருக்கிறார். அவருடைய கடின உழைப்பும் அர்ப்பணிப்பும் திரையில் தெளிவாக தெரிகிறது. சினிமாவில் உண்மையாக உழைத்தவர்களின் உழைப்பு ஒருபோதும் வீணாகாது. இந்தப் படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றியைத் தரும் என்று நம்புகிறேன். நபா நடேஷ் மிகச் சிறப்பாக நடித்துள்ளார். ஜெகபதி பாபு சார், சரண்யா மேடம் மற்றும் படத்தில் நடித்துள்ள அனைத்து நடிகர்களும் தங்களது கதாபாத்திரங்களுக்கு முழு நியாயம் செய்துள்ளனர்.

இன்று இந்திய சினிமாவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பல தொழில்நுட்பக் கலைஞர்கள் முக்கிய பங்களிப்பை வழங்கி வருவது பெருமைக்குரிய விஷயம். இந்திய சினிமாவின் வளர்ச்சியில் தமிழ் சினிமாவின் பங்கு மிகவும் முக்கியமானதாக உள்ளது. ஒட்டுமொத்தமாக ‘நாகபந்தம்’ ஒரு மிகச் சிறந்த திரைப்படமாக உருவாகியுள்ளது. இந்தப் படத்தின் ஒரு பகுதியாக இருந்தது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இறைவனின் அருளால், குறிப்பாக முருகப்பெருமானின் அருளால், இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற வேண்டும் என்று மனதார பிரார்த்திக்கிறேன். நன்றி.

நடிகர் ஜான் கொக்கேன் பேசியதாவது, “புராணக் கதைகளை மையமாகக் கொண்ட திரைப்படங்களை நாம் ஏற்கனவே நிறைய பார்த்திருக்கிறோம். ஆனால் மிகப்பெரிய பொருட்செலவில், உலகத் தரத்தில், பான்-இந்தியா அளவில் உருவாகியுள்ள புராணப் பின்னணியிலான திரைப்படமாக ‘நாகபந்தம்’ அமைந்துள்ளது.

இந்தப் படத்தில் எனக்கு ஒரு முக்கியமான கதாபாத்திரத்தை வழங்கிய இயக்குநர் அபிஷேக் நாமா அவர்களுக்கு நான் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அதேபோல் தயாரிப்பாளர்கள் நிஷிதா மேம் மற்றும் கிஷோர் சார் ஆகியோருக்கும் என் நன்றிகள். குறிப்பாக கிஷோர் சாருக்கு இந்தப் படம் குறித்து மிகப்பெரிய கனவும் தெளிவான பார்வையும் இருந்தது. அந்தப் பார்வையின் வெளிப்பாட்டை நீங்கள் டிரெய்லரிலேயே பார்த்திருப்பீர்கள்.

‘நாகபந்தம்’ ஒரு மிகப்பெரிய காட்சிப் பிரம்மாண்டம் கொண்ட திரைப்படம். தற்போது ஓடிடி காலகட்டமாக இருந்தாலும், இப்படிப்பட்ட திரைப்படங்களை சிறிய திரையில் முழுமையாக ரசிக்க முடியாது. இந்தப் படத்தை கட்டாயம் திரையரங்கின் பெரிய திரையில் பார்த்தால்தான் அதன் உண்மையான அனுபவத்தை உணர முடியும்.

டிரெய்லரில் நீங்கள் பார்த்ததுபோல, நாகபந்தம், பிரம்மகமலம் மற்றும் அதனைச் சுற்றிய மர்மங்கள் கதையின் மையமாக இருக்கின்றன. நாயகன் விராட் கர்ணா அந்த மர்மத்தைத் தேடும் பயணத்தில் செல்லும்போது, பார்வையாளர்களும் அவருடன் இணைந்து அந்தப் பயணத்தை அனுபவிப்பார்கள். படத்தைப் பார்க்கும் ஒவ்வொருவரும் அந்தத் தேடலின் ஒரு பகுதியாக மாறுவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

இந்தப் படத்தில் பணியாற்றியது எனக்கு மிகவும் சிறப்பான அனுபவமாக இருந்தது. பிரம்மாண்டமான செட்கள், மிகப்பெரிய தயாரிப்பு மதிப்பு மற்றும் திறமையான கலைஞர்கள் கொண்ட குழுவுடன் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. நாபா நடேஷ், ஐஸ்வர்யா மேனன், அனசுயா, ஜான் விஜய், சரண்யா மேடம் உள்ளிட்ட அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர். ஒட்டுமொத்தமாக இது ஒரு அர்ப்பணிப்பான குழுவின் கடின உழைப்பில் உருவான மிகப்பெரிய திரைப்படம். வரும் ஜூலை 3ஆம் தேதி அனைவரும் திரையரங்குகளுக்கு சென்று ‘நாகபந்தம்’ திரைப்படத்தை பார்த்து ஆதரவு அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

விநியோகஸ்தர் சிவ பிரசாத் பேசியதாவது, “நேரில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியாததற்கு மன்னிக்கவும். பயணக் காரணங்களால் வர இயலவில்லை. இருப்பினும், என் மனம் முழுவதும் இந்த நிகழ்வுடனும், ‘நாகபந்தம்’ படக்குழுவுடனும் இருக்கிறது. ‘நாகபந்தம்’ திரைப்படம் உங்களுக்கெல்லாம் மகிழ்ச்சியையும், மறக்க முடியாத திரையரங்கு அனுபவத்தையும் தரும் என்ற முழு நம்பிக்கை எனக்கு உள்ளது. இந்தப் படத்தின் ஒவ்வொரு காட்சியிலும், ஒவ்வொரு ஃப்ரேமிலும் எங்கள் குழுவின் கடின உழைப்பும், அர்ப்பணிப்பும், அன்பும் நிறைந்திருக்கிறது. இந்தப் படத்தை உருவாக்கிய அனைத்து நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் படக்குழுவினருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். அதேபோல் எப்போதும் ஆதரவளித்து வரும் ஊடக நண்பர்களுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நடிகை நபா நடேஷ் பேசியதாவது, “முதலில் கலைப்புலி எஸ். தாணு சார் மற்றும் ஏ எம் ரத்னம் சார் ஆகியோருக்கு எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் வாழ்த்துகளும் ஆசீர்வாதங்களும் எங்களுக்கு மிகவும் முக்கியமானவை. ‘நாகபந்தம்’ திரைப்படம் வரும் ஜூலை 3 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இது சாதாரணமான திரைப்படம் அல்ல. நமது வரலாறு, மர்மம், சாகசம், ஆக்சன், திரில்லர் மற்றும் உணர்வுப்பூர்வமான தருணங்கள் அனைத்தும் இணைந்த ஒரு பிரம்மாண்டமான திரை அனுபவம். இந்தப் படத்தில் பணியாற்றியது எனக்கு மிகவும் சிறப்பான அனுபவமாக இருந்தது. படத்தின் கதையும், உருவாக்கப்பட்ட உலகமும் பார்வையாளர்களுக்கு புதுமையான அனுபவத்தை வழங்கும். டிரெய்லருக்கு நீங்கள் அளித்த வரவேற்பைப் பார்த்து நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளோம்.

டிரெய்லர் உங்களுக்கு பிடித்திருக்கிறதா? அதேபோல் படம் முழுவதும் உங்களை கவரும் என்று நம்புகிறேன். அனைவரும் குடும்பத்துடன் திரையரங்குகளுக்கு வந்து ‘நாகபந்தம்’ திரைப்படத்தை பார்த்து ஆதரவு அளிக்க வேண்டும். உங்கள் அனைவரையும் திரையரங்குகளில் சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறேன். நன்றி.”

நடிகர் விராட் கர்ணா பேசியதாவது, “‘நாகபந்தம்’ திரைப்படத்தின் புரமோஷனுக்காக இங்கு வந்திருப்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள ஊடக நண்பர்கள், படக்குழுவினர் மற்றும் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். இந்த நிகழ்வில் கலந்து கொண்டுள்ள அனைவருக்கும் நன்றி. குறிப்பாக எங்கள் தயாரிப்பாளர்கள் மற்றும் இந்தப் படத்தை உருவாக்கிய அனைவருக்கும் என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இன்றைய காலகட்டத்தில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை ஆன்மிகம் மற்றும் பக்தி சார்ந்த விஷயங்களில் அதிகமாக ஈடுபட ஊக்குவித்து வருகிறார்கள். ஏனெனில் அது மனதிற்கும் உடலுக்கும் அமைதியையும் சக்தியையும் அளிக்கிறது. ‘நாகபந்தம்’ திரைப்படத்தில் பணியாற்றிய அனுபவமும் எனக்குள் பல மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் படத்தை முடித்த பிறகு நான் ஆன்மிக ரீதியாகவும், மனதளவிலும் மிகவும் வலிமையாக உணர்கிறேன்.

இந்தப் படம் இந்திய கலாச்சாரம், பாரம்பரியம், தைரியம், கோவில்களின் மரபு மற்றும் நமது தொன்மையான நாகரீகத்தின் பல அம்சங்களை பேசுகிறது. நம் நாட்டின் வரலாறு மற்றும் ஆன்மிக மரபுகளை புதிய தலைமுறைக்கு கொண்டு செல்லும் ஒரு முயற்சியாக இந்தப் படம் இருக்கும். ‘நாகபந்தம்’ திரைப்படத்தில் நான் ‘ருத்ரா’ என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். ஒரு அறிமுக நடிகராக இந்த வாய்ப்பு எனக்கு மிகவும் முக்கியமானது. இந்தக் கதாபாத்திரத்திற்காக நான் முழு அர்ப்பணிப்புடன் உழைத்துள்ளேன். டிரெய்லருக்கு நீங்கள் அளித்த வரவேற்பு எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளது.

வரும் ஜூலை 3 ஆம் தேதி திரைப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. டிரெய்லருக்கு நீங்கள் கொடுத்த அதே அன்பையும் ஆதரவையும் படத்திற்கும் வழங்குவீர்கள் என்று நம்புகிறேன். நான் கொஞ்சம் பதட்டமாக இருப்பதால் ஏதாவது தவறாக பேசியிருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள். சென்னை மக்களின் அன்பிற்கும் ஆதரவிற்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

தமிழக விநியோகஸ்தர் முருகன் பேசியதாவது, “கலைஞர்கள், பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்கள், திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் என இந்த நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். எங்கள் ‘நாகபந்தம்’ திரைப்படத்திற்கு நீங்கள் தொடர்ந்து அளித்து வரும் அன்பும் ஆதரவும் எங்களுக்கு மிகப்பெரிய உற்சாகத்தை அளிக்கிறது. இந்த நிகழ்வில் பங்கேற்று சிறப்பித்த அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *