ஒவ்வொரு கதையும் எளிதான பதில்களை வழங்குவதற்காக உருவாக்கப்படுவதில்லை. சில கதைகள் நம்மை அசௌகரியத்திற்கு உள்ளாக்கி, நாம் ஏற்றுக்கொள்வதை கேள்விக்குள்ளாக்கி, நாம் பார்க்காமல் தவிர்க்க விரும்பும் உண்மைகளை எதிர்கொள்ள வைக்கின்றன. Navjot Gulati இயக்கத்தில், Dinesh Vijan மற்றும் Amar Kaushik தயாரிப்பில், Maddock Films நிறுவனத்தின் தயாரிப்பாக உருவாகியுள்ள ‘Pooja Meri Jaan’ திரைப்படம் 2026 அக்டோபர் 2-ம் தேதி Hindi Zee 5-ல் வெளியாகிறது.
இந்த தீவிரமான டிராமா திரைப்படம் Pooja-வை மையமாகக் கொண்டு நகர்கிறது. தொடர் அதிர்ச்சியூட்டும் சம்பவங்கள், நிராகரிப்பு, வெறித்தனமான காதல், சம்மதம் மற்றும் உண்மையில் என்ன நடந்தது என்பதன் பின்னணியில் எழும் கேள்விகளை எதிர்கொள்ள வைக்கின்றன.
Pooja Meri Jaan திரைப்படம் எதைப் பற்றியது?
இந்தக் கதையின் மையத்தில் Pooja இருக்கிறார். நெருங்கிய நண்பர் ஒருவர் தனது காதலை வெளிப்படுத்தும்போது, அதை அவர் நிராகரிக்கிறார். அதைத் தொடர்ந்து தொடர்ச்சியான அதிர்ச்சியூட்டும் சம்பவங்கள் நடைபெறுகின்றன. கதை நகரும் போது, உண்மையில் என்ன நடந்தது, இதற்கு யார் பொறுப்பு, மேலும் Pooja சூழ்நிலைகளின் பாதிக்கப்பட்டவரா அல்லது அவரைச் சுற்றி நடந்த சம்பவங்களுடன் அவருக்கு ஆழமான தொடர்பு உள்ளதா என்ற கேள்விகள் எழுகின்றன.
Huma Qureshi, இந்த வழக்கில் நெருக்கமாக ஈடுபடும் வழக்கறிஞரான Sana கதாபாத்திரத்தில் நடிக்கிறார். Pooja-வைச் சுற்றி நடந்த சம்பவங்களின் பின்னணியை ஒன்றிணைத்து, முரண்பட்ட தகவல்களுக்கு அடியில் மறைந்திருக்கும் உண்மையை வெளிக்கொணர அவர் முயற்சிக்கிறார். உண்மை தொடர்ந்து எட்டாக்கனியாக இருக்கும் நிலையில், ‘Pooja Meri Jaan’ திரைப்படம் எங்கே அப்பாவித்தனம் முடிகிறது, எங்கே பொறுப்பு தொடங்குகிறது என்ற கேள்விகளை பார்வையாளர்களிடம் எழுப்புகிறது. நிராகரிப்பு, வெறித்தனமான காதல் மற்றும் சமூகத்தின் தீர்ப்புகள் ஆகியவற்றின் இருண்ட சிக்கல்களை படிப்படியாக வெளிப்படுத்துகிறது.
‘Pooja Meri Jaan’ திரைப்படம் தனித்து நிற்பதற்கான காரணங்கள்:
● மாறுபட்ட பார்வைகள் மூலம் பல அடுக்குகளைக் கொண்ட மர்மத்தை வெளிப்படுத்துகிறது
● Mrunal Thakur மற்றும் Huma Qureshi இருவரையும் அழுத்தமான கதாபாத்திரங்களில் ஒன்றிணைக்கிறது
● பார்வை எவ்வளவு வேகமாக உண்மையை வடிவமைக்க முடியும் என்பதை ஆராய்கிறது
● வெறித்தனமான காதல், எல்லைகள் மற்றும் சமூகத்தின் தீர்ப்புகளை ஆழமாக ஆராய்கிறது
● எளிதான பதில்கள் இல்லாமல் கேள்விகளை எழுப்பும் ஒரு கதை
நடிகை Mrunal Thakur கூறுகையில், “ஆரம்பத்திலிருந்தே இந்தக் கதாபாத்திரம் என்னை ஈர்த்தது. ஏனெனில், ஒரு நடிகையாக என்னுள் இருக்கும் பல்வேறு பரிமாணங்களை வெளிப்படுத்தவும், வித்தியாசமான ஒன்றை வழங்கவும் இந்த கதாபாத்திரம் எனக்கு வாய்ப்பளிக்கும் என்று எனக்குத் தெரியும். Pooja மிகவும் ஆழமான பல அடுக்குகளைக் கொண்ட கதாபாத்திரம். அவரைச் சுற்றி நடக்கும் சம்பவங்களின் சிக்கல்தன்மையே திரைப்படத்திற்கும் அவரது பயணத்திற்கும் என்னை ஈர்த்தது. பார்வையாளர்களே கண்டறிய வேண்டிய பதில்களை வெளிப்படுத்தாமல், பல்வேறு உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் இந்த கதாபாத்திரத்தில் நான் பயணிக்க வேண்டியிருந்தது. நீங்கள் பார்ப்பது, நீங்கள் நம்புவது மற்றும் ஒருவரையோ அல்லது ஒரு சூழ்நிலையையோ நாம் எவ்வளவு வேகமாக மதிப்பிடுகிறோம் என்பதை நமது பார்வைகள் எவ்வாறு வடிவமைக்கின்றன என்பதை இந்தக் கதை தொடர்ந்து கேள்விக்குள்ளாக்குகிறது. இது தீவிரமான மற்றும் சவாலான அனுபவமாக இருந்தது. அதே நேரத்தில், மிகுந்த மனநிறைவை அளித்த அனுபவமாகவும் இருந்தது. பார்வையாளர்கள் இந்தப் படத்தை அனுபவித்து, Pooja-வின் பயணத்தைப் புரிந்துகொண்டு, உறவுகள், நிராகரிப்பு, சம்மதம், பார்வை மற்றும் இறுதியாக ஒரு சமூகமாக நாம் வழங்கும் தீர்ப்புகள் குறித்த கேள்விகளில் ஈடுபடுவதை காண நான் ஆவலுடன் இருக்கிறேன்.”
நடிகை Huma Qureshi கூறுகையில், “‘Pooja Meri Jaan’ திரைப்படத்தை சுவாரஸ்யமாக்குவது, அதன் மையச் சம்பவத்தை ஒரே ஒரு பார்வையில் மட்டும் அணுகாமல் இருப்பதுதான். Pooja-வைச் சுற்றியுள்ள முரண்பட்ட தகவல்களை புரிந்துகொண்டு, என்ன நடந்தது என்பதை ஒன்றிணைக்க முயற்சிக்கும் Sana, கதைக்குள் ஒரு சட்டரீதியான பார்வையை கொண்டு வருகிறார். மனிதர்களையும் சம்பவங்களையும் நாம் புரிந்துகொள்ளும் விதத்தை நமது பார்வை எவ்வாறு வடிவமைக்கிறது என்பதையும், நமது அனுமானங்களிலிருந்து உண்மையைப் பிரிப்பது எவ்வளவு கடினம் என்பதையும் இந்தத் திரைப்படம் ஆராய்கிறது. சம்மதம், பொறுப்பு, நீதி மற்றும் சமூகத்தின் தீர்ப்புகள் குறித்த அசௌகரியமான கேள்விகளை எழுப்பும் அதே நேரத்தில், உணர்வுப்பூர்வமாக ஈர்க்கும் ஒரு கதையின் ஒரு பகுதியாக இருந்தது மிகவும் வலிமையான அனுபவமாக இருந்தது.
நடிகர் Vikram Singh Chauhan கூறுகையில், “‘Pooja Meri Jaan’ என்பது நம்மை நீண்ட காலம் சிந்திக்க வைக்கும் வகையான கதை. ஏனெனில், ஒரு சூழ்நிலையையோ அல்லது அதில் சம்பந்தப்பட்ட நபர்களையையோ நாம் உண்மையில் எவ்வளவு நன்றாக அறிந்திருக்கிறோம் என்ற கேள்வியை இது எழுப்புகிறது. உறவுகள், நிராகரிப்பு மற்றும் எல்லைகள் சோதிக்கப்படும் போது உருவாகக்கூடிய உணர்வுகளை இந்தப் படம் ஆராயும் விதம்தான் என்னை இதில் நடிக்கத் தூண்டியது. இந்தக் கதை தொடர்ந்து நமது பார்வையை மாற்றிக்கொண்டே செல்கிறது. மேலும் எது உண்மை, எது நமது பார்வையால் உருவாக்கப்பட்டது என்ற கேள்வியையும் எழுப்புகிறது. பார்வையாளர்களுக்கு எளிதான பதில்களை வழங்காமல், ஆழமாகப் பார்க்கவும், தங்களது அனுமானங்களைக் கேள்விக்குள்ளாக்கவும், இறுதியில் என்ன நடக்கிறது என்பது குறித்த தங்களுக்கான புரிதலை உருவாக்கிக்கொள்ளவும் ஊக்குவிக்கும் ஒரு திரைப்படத்தின் ஒரு பகுதியாக இருந்தது சுவாரஸ்யமான மற்றும் சவாலான அனுபவமாக இருந்தது.

