நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் திருவிளையாடல் ட்ரெய்லர் ரிலீஸ்!

அருட்செல்வர் ஏபி நாகராஜன் இயக்கத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த திரைப்படம் எப்படிப்பட்ட வெற்றியை குவித்த திரைப்படம் என்பது எல்லோரும் அறிந்த ஒன்று. சிவாஜி, சாவித்திரி, டி எஸ் பாலையா முத்துராமன், நாகேஷ், தேவிகா ஆகியோர் நடித்துள்ள இப்படத்திற்கு கவிஞர் கண்ணதாசன் பாடல்கள் எழுத இசை அமைத்தவர் கே வி மகாதேவன்.

மாபெரும் வெற்றி படமாக அமைந்த அந்தப் படத்தை நீண்ட இடைவேளைக்குப் பிறகு ஸ்ரீ பால விநாயகர் பிக்சர்ஸ் சார்பில் ஜி. லதா மறு வெளியீடு செய்ய இருக்கிறார். அதை ஒட்டி திருவிளையாடல் படத்தினுடைய ட்ரெய்லர் வெளியீட்டு விழா வரும் அக்டோபர் மாதம் ஒன்றாம் தேதி வியாழக்கிழமை நடிகர் திலகம் சிவாஜியின் 99 ஆவது பிறந்தநாள் அன்று காசினோ தியேட்டரில் நடைபெற இருக்கிறது.

திருவிளையாடல் பட தயாரிப்பாளர் ஏ.பி. நாகராஜனின் மகனான ஏ.என். பரமசிவம், நடிகரும் படத் தயாரிப்பாளருமான சித்ரா லட்சுமணன், நடிகர் மகேந்திரன் , நடிகர் இளவரசு, நடிகை வடிவுக்கரசி, நடிகரும் இயக்குனருமான அண்ணாதுரை கண்ணதாசன், கதாசிரியரும் இயக்குனருமான பூபதி ராஜா , முனைவர் மருது மோகன் ஆகியோர் இந்த விழாவிலே கலந்து கொண்டு சிறப்புரையாற்ற இருக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *