100 நாட்டுப்புற இசைக் கலைஞர்களுடன் ‘எல்லம்மா’ பாடலை பதிவு செய்த ராக்ஸ்டார் DSP!

‘பலாகம்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்த வேணு எல்தண்டி இயக்கத்தில், தில் ராஜு வழங்க, சிரிஷ் தயாரிப்பில், இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் கதாநாயகனாக நடிக்கும் ‘எல்லம்மா’ திரைப்படத்தின் அறிவிப்பு வெளியானது முதலே திரைத்துறையினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் இந்தத் திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில், ராக்ஸ்டார் தேவி ஸ்ரீ பிரசாத், இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் மற்றும் கலாச்சாரங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 100 பாரம்பரிய நாட்டுப்புற இசைக் கலைஞர்களுடன் இணைந்து, ‘எல்லம்மா’ படத்தின் டைட்டில் பாடலைப் பதிவு செய்துள்ளார். விரைவில் வெளியாக இருக்கும் இந்தப் பாடல் ரசிகர்கள் மத்தியில் நிச்சயம் வரவேற்பைப் பெறும்.

தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய ஐந்து மொழிகளில் ‘எல்லம்மா’ திரைப்படம் வரும் மார்ச் 5 ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக திரையரங்குகளில் வெளியாகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *