இணையத்தை கலக்கும் தக் லைஃப் ட்ரைலர், ட்ரெண்டிங்கிலும் முதலிடம்!

மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிலம்பரசன் (STR), த்ரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஜோஜூ ஜார்ஜ் மற்றும் பலர் நடித்துள்ள படம் “தக் லைஃப்”. இந்தப் படத்தின் ட்ரைலர் நேற்று மாலை 5 மணிக்கு வெளியானது. ட்ரைலர் வெளியான சில மணி நேரங்களிலேயே ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. அத்துடன் யூடியூப் மற்றும் சமூக வலைத்தளங்களில் பல மில்லியன் வியூஸ் பெற்று ட்ரெண்டிங்கிலும் நம்பர் 1 இடத்தை பிடித்திருக்கிறது.

ட்ரைலர் கட் செய்யப்பட்ட விதமே ரசிகர்களை மிகவும் ஈர்த்துள்ளது. படத்தின் கதை இது தான் என வெளிப்படையாக சொல்லி ரசிகர்களை தயார்படுத்தும் வேலைட்யை ட்ரைலர் செய்திருப்பதாகவே தெரிகிறது. அத்துடன் அதிரடியான ஆக்ஷன் காட்சிகள், இதுவரை காணாத லொகேஷன்ஸ், அதன் காட்சி அமைப்பு மற்றும் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசை என எல்லாமே பார்வையாளர்களை கவரும் வகையில் அமைந்துள்ளது.

இவை அனைத்தையும் தாண்டி கமல்ஹாசன் vs சிலம்பரசன் என்ற அந்த மோதல் படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகப்படுத்தியுள்ளது. உலக நாயகன் கமல்ஹாசனின் பலவித தோற்றங்களும், சிலம்பரசனின் இதுவரை காணாத புதிய தோற்றமும் ரசிகர்களை கவர்ந்துள்ளது. அத்துடன் கமல், அபிராமி முத்தகக்காட்சி மற்றும் கமல், திரிஷா இடையேயான காதல் காட்சியும் மிகப்பெரிய அளவில் பேசு பொருளாகியுள்ளன.

தக் லைஃப் ட்ரைலர் வெளியான முதல் 24 மணி நேரத்தில் 24 மில்லியன் வியூஸ் பெற்றுள்ளது. யூடியூப் ட்ரெண்டிங் பட்டியலில் முதலிடத்தையும் பிடித்துள்ளது. மற்ற மொழி ட்ரைலர்களும், அதாவது தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியான ட்ரைலர்களும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளன.

அடுத்ததாக தெலுங்கு, இந்தி, மலையாள ட்ரைலர் வெளியீட்டு விழாக்களும், தொடர்ந்து மே 24, 2025 அன்று சென்னை சாய்ராம் கல்லூரியில் படத்தின் இசை வெளியீட்டு விழாவும் மிக பிரமாண்டமாக நடைபெற உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *