வட அமெரிக்க தமிழ் சங்க திருவிழாவில் திரையிடப்பட்ட ” திருக்குறள் – 2″ மாதிரி காட்சி!

‘காமராஜ்’, ‘வெல்கம் பேக் காந்தி’ திரைப்படங்களைத் தயாரித்த ரமணா கம்யூனிகேஷன்ஸ், ‘திருக்குறள்’ திரைப்படத்தை சென்ற ஆண்டு தயாரித்து வெளியிட்டது. இந்த படத்தை A.J. பாலகிருஷ்ணன் இயக்கியிருந்தார். அதன் தொடர்ச்சியாக திருக்குறள் படத்தில் இடம்பெறாத மேலும் பல கருத்துக்களை வலியுறுத்தி அப்படத்தின் இரண்டாம் பாகம் தயாராகிறது. ஆங்கிலத்தில் ” Once Upon a Time in Hindustan ” என்ற பெயரில் தயாராகிறது.

திருக்குறள் முதல் பாகத்தில் நடித்த கலைச்சோழன் வள்ளுவனாகவும், வாசுகியாக நடித்த தனலட்சுமியும் இந்த இரண்டாம் பாகத்திலும் நடிக்கின்றனர். மற்றும் பல நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் பங்காற்ற உள்ளனர். VIT வேந்தர், தலைவர் தமிழியக்கம் DR.G.விசுவநாதன் வழங்க ரமணா கம்யூனிகேஷன்ஸ் தயாரிக்கிறது. T.P.இராஜேந்திரனும் இத்திருப்பணியில் இணைகிறார். திருக்குறள் முதல் பாகத்திற்கு ஒளிப்பதிவு செய்த எட்வின் சகாய் இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். எழுதி இயக்குகிறார் A. J. பாலகிருஷ்ணன்.

இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில்,
அமெரிக்க தமிழ் சங்க பேரவை நடத்தும் வட அமெரிக்கத் தமிழ் சங்கத் திருவிழா நேற்று நடைபெற்றது. அந்த விழாவில் திருக்குறள் படம் திரையிடப்பட்டு அனைவரின் கவனத்தை ஈர்த்தது குறிப்பிடத்தக்கது.

அத்தோடு திருக்குறள் திரைப்படத்தின் இரண்டாம் பாகமான ஆங்கில மொழியில் உருவாகும் ” Once Upon a Time in Hindustan ” படத்தின் நான்கு நிமிட மாதிரி காட்சி திரையிடப்பட்டது.

அதில் வரும் அறம் சார்ந்த காட்சிகளை பார்த்த அனைவரும் திகைத்துவிட்டனர். இன்றைய நவீன காலகட்டத்திற்கு இந்த அறம் எப்படி சாத்தியம் என்று இயக்குனர் A.J. பாலகிருஷ்ணனை தொடர்பு கொண்டு எழுப்பிய கேள்விகளுக்கு, இயக்குனர் பாலகிருஷ்ணன் நாகரீகம், செயல்கள், எண்ணங்கள் மாறும் ஆனால் அறம் ஒருபோதும் மாறாது என்று பதிலளித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *