சென்னையில் சபரி ஆர்டிசன்ஸ் வில்லேஜை தொடங்கி வைத்த பத்மஸ்ரீ ஜெயராம்!

பத்மஸ்ரீ விருது பெற்ற பிரபல நடிகர் ஜெயராம், இந்தியாவின் பாரம்பரிய கைவினைப் பொருட்கள், கலைகள் மற்றும் தனித்துவமான கைவினைப் பொருட்களை ஒரே இடத்தில் கொண்டுவரும் ‘சபரி ஆர்டிசன்ஸ் வில்லேஜ்’-ஐ சென்னையில் தொடங்கி வைத்தார்.

இந்திய கைவினைக் கலையின் ஒருங்கிணைந்த தளமாக உருவாக்கப்பட்டுள்ள சபரி ஆர்டிசன்ஸ் வில்லேஜில், நாடு முழுவதிலுமிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பாரம்பரிய மற்றும் கைவினைப் பொருட்கள் இடம்பெற்றுள்ளன. இதன் மூலம் இந்தியாவின் பல்வேறு கலை மற்றும் கைவினைப் பாரம்பரியங்களை மக்கள் அறிந்து, ரசித்து கொண்டாடுவதற்கான வாய்ப்பு உருவாகி இருக்கிறது.

இந்த முயற்சி கைவினைக் கலையை ஊக்குவிப்பதோடு மட்டுமின்றி, சமூக நலனையும் முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது. 1996ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சபரி அறக்கட்டளை, சபரி குழுமத்தின் தலைவர் திரு. சஷி குமார் தலைமையில் செயல்பட்டு வருகிறது. கேரளாவின் பாலக்காட்டில் உள்ள ஐந்து பள்ளிகள் மூலம் 6,000-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு இலவசக் கல்வி வழங்கப்பட்டு வருகிறது.

இந்திய கைவினைக் கலையை பாதுகாத்து வளர்ப்பதுடன், கல்வி அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்ற தனது சமூகப் பொறுப்பையும் தொடர்ந்து முன்னெடுப்பதே சபரி ஆர்டிசன்ஸ் வில்லேஜின் நோக்கமாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *