ரஜினி, விஜய்லாம் வராங்க, ஆனா இவர் வரல – தயாரிப்பாளர் திருமலை

அறிமுக இயக்குநர் பாலாஜி கேசவன் இயக்கத்தில் அசோக் செல்வன், அவந்திகா மிஸ்ரா ஜோடியாக நடிக்க உருவாகி இருக்கும் படம் ‘எமக்கு தொழில் ரொமான்ஸ்’. இந்த படத்தில் அழகம் பெருமாள், ஊர்வசி, எம். எஸ். பாஸ்கர், பகவதி பெருமாள், படவா கோபி, விஜய் வரதராஜ் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். கணேஷ் சந்திரா ஒளிப்பதிவு செய்ய, நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்திருக்கிறார். டி கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் இயக்குநர் எம்.திருமலை தயாரித்திருக்கிறார். விரைவில் வெளியாக இருக்கும் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. விழாவில் இயக்குனர் சங்க தலைவர் ஆர்.கே.செல்வமணி, தயாரிப்பாளர் கே.ராஜன் உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டு இசையை வெளியிட்டனர்.

அப்போது பேசிய தயாரிப்பாளர் திருமலை, “சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தளபதி விஜய் போன்ற உச்ச நட்சத்திரங்கள் கூட அவர்கள் நடிக்கும் படத்தின் புரமோஷனுக்கு செல்கிறார்கள். படத்தை விளம்பரப்படுத்துகிறார்கள். ஆனால் இந்த படத்தின் ஹீரோ அசோக் செல்வன் இந்த படத்தின் பிரமோஷனில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்திருக்கிறார். ஏன் கலந்து கொள்ளவில்லை என்பதற்கான காரணத்தையும் அவர் தெரிவிக்கவில்லை. அவரது இந்த போக்கு கண்டனத்திற்குரியது. ஒரு திரைப்படத்திற்கு தயாரிப்பாளர்கள் தான் முக்கியம் என்பதை அவர் உணர வேண்டும். மேலும் அவர் கேரவனில் அமர்ந்து கொண்டு பணம் கொடுத்த பிறகு தான் படப்பிடிப்பிற்கு வந்தார். அதனால் எனக்கு ரூ.8 லட்சம் செலவானது, அதை அவர் திருப்பி தருவாரா? என தன் ஆதங்கத்தையும் வெளிப்படுத்தியிருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *