செப்டம்பர் 5ஆம் தேதி பிரமாண்டமாக வெளியாகும் “சக்தித் திருமகன்”!

அருவி மற்றும் வாழ்ல் படங்களை இயக்கிய அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்திருக்கும் படம் தான் “சக்தித் திருமகன்”. இப்படத்தின் டீசர் ஏற்கனவே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. கேங்க்ஸ்டர், ஹஸ்ட்லர், ட்ரிக்ஸ்டர் என்ற கதாநாயகனின் இயல்பைப் பற்றி விவரிக்கும் அந்த 2 நிமிடம் 15 விநாடிகள் ஓடும் ப்ரோமோ ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டியிருக்கிறது.

தயாரிப்பாளர்களால் “நியோ-அரசியல் பிளாக்பஸ்டர்” என்ற Tagline உடன் வெளியாகும் இந்த படம், கூர்மையான கதை சொல்லல், Layered கதாபாத்திரங்கள் மற்றும் உயர்தர தொழில்நுட்பம் ஆகியவற்றின் புத்துணர்ச்சியூட்டும் கலவையாக இருக்கும் என்று உறுதியளிக்கிறது. மாறுபட்ட கதையின் பின்னணி, ஷெல்லி காலிஸ்ட்டின் வசீகரிக்கும் காட்சிகள் மற்றும் ரேமண்ட் டெரிக் கிராஸ்டாவின் ஷார்ப் எடிட்டிங் ஆகியவற்றுடன் வெளியான இந்த டீஸர் மட்டுமே எதிர்பார்ப்புகளை வானளாவ உயர்த்தியுள்ளது.

விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன் தயாரித்துள்ள இத்திரைப்படத்திற்கு விஜய் ஆண்டனி இசையமைத்துள்ளார். வாகை சந்திரசேகர், சுனில் கிருபளானி, செல் முருகன், திருப்தி ரவீந்திரா, கிரண், ரினி பாட், ரியா ஜித்து மற்றும் மாஸ்டர் கேசவ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

மிகுந்த எதிர்பார்ப்புடன் இருக்கும் இந்த சக்தித் திருமகன் படத்தை வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியிட இருப்பதாக தயாரிப்பு நிறுவன, அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது ஒரு சக்தி வாய்ந்த சினிமா அனுபவமாக இருக்கும் என்பது மட்டும் உறுதி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *