பவர் ஸ்டார் பவன் கல்யாண் நடிப்பில் அடுத்து வெளி வர இருக்கும் திரைப்படம் ஹரிஹர வீர மல்லு. இதுவரை வெளியிடப்பட்ட பாடல்கள் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பையும் பாராட்டையும் பெற்றுள்ளன. தற்போது இந்த படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லருடன் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட மூன்றாவது சிங்கிளையும் வெளியிட படக்குழு தயாராகி வருகிறது. டிரெய்லர் வெளியீட்டின் மூலம் படத்துக்கான எதிர்பார்ப்பு புதிய உயரங்களை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மிக பிரமாண்டமாக உருவாக்கப்பட்டு வரும் ஹரிஹர வீரமல்லு இறுதி கட்ட பணிகளில் தீவிரமாக உள்ளது. தீவிரமான வி. எஃப். எக்ஸ் பணிகள் முதல் ஆழமான மற்றும் இரட்டை ஒலி வடிவமைப்பு வரை இறுதிகட்ட பணிகள் ஜரூராக நடைபெற்று வருகின்றன.
இயக்குனர் A.M. ஜோதி கிருஷ்ணா படத்தை மிக விரைவில் கொண்டு வர அயராது உழைத்து வருகிறார். திரையில் ஒவ்வொரு கணமும் மிகச் சிறந்த அனுபவத்தை கொடுக்க வேண்டும் என்ற லட்சியத்துடன் படத்தை உருவாக்கி வருகிறார். ஆஸ்கார் விருது பெற்ற M.M கீரவாணியின் இசை, மனோஜ் பரமஹம்சாவின் ஈர்க்கக்கூடிய ஒளிப்பதிவு, தோட்டா தரணி தயாரிப்பின் கம்பீரமான கலை இயக்கம் ஆகியவை பொதுமக்களை ஆச்சரியப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
நடிகர்களை பொறுத்தவரையில் பாபி தியோல் முகலாய அரசராகவும், நிதி அகர்வால் முக்கிய கதாபாத்திரத்திலும், சத்யராஜ் மற்றும் ஜிஷு சென்குப்தா போன்ற அனுபவம் வாய்ந்த நடிகர்களும் படத்துக்கு பலம் சேர்க்கின்றனர்.
தெலுங்கு, ஹிந்தி, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் உலகளவில் ஒரு மிகப்பெரிய வெளியீட்டுக்கு தயாராகி வரும் ஹரி ஹர வீர மல்லு படத்தை ஏ. தயாகர் ராவ் தயாரித்துள்ளார். இப்படத்தை A.M. ரத்னம் தனது மெகா சூர்யா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் மூலம் வெளியிட இருக்கிறார். ஜூன் 12,2025 அன்று உலகம் முழுக்க வெளியாக இருக்கிறது.