மனதில் “நச்” என்று ஒட்டிக் கொள்ளும் டைட்டில்கள் வைக்கும் சுசி கணேசன்!

மக்களிடம் படத்தை கொண்டுசேர்ப்பதற்குள் , டைட்டலை கொண்டு சேர்ப்பதில் கில்லாடி. அவருக்கு, ஒரு படத்தின் தலைப்பு என்பது வெறும் பெயர் அல்ல—அந்தக் கதையின் முதல் உணர்வு. அது ரசிகர்களின் மனதில் முதலில் ஆர்வத்தையும், எதிர்பார்ப்பையும் உருவாக்க வேண்டும் என்பதில் அதிக சிரத்தை எடுத்துக் கொள்பவர்.

“திருட்டுப் பயலே’ படத்தின் வெற்றிக்கு படத்தின் தலைப்பும் முக்கிய காரணம் என ஒரு விழாவில் இயக்குநர் கே. பாக்யராஜ் பாராட்டு தெரிவித்தார். காதலை விவரிக்க பல வார்த்தைகள் இருந்தாலும், “விரும்புகிறேன்“ என்கிற பழகிய சொல்லை தலைப்பாக்கி , தீயணைக்கும் நீர் குழாய்களால் நாயகன் – நாயகியை கட்டிப்போட்டு மவுண்ட் ரோடில் அவர் வைத்த் பேனர் பேசுபொருள் ஆனது.

‘5 Star’ என்ற குழந்தைகளுக்கு பிடித்த வார்த்தையை மறக்க முடியாத நண்பர்களின் பிராண்டாக மாற்றினார். ‘கந்தசாமி’ என்ற சாதாரண பெயரை, மக்கள் மனதில் ஒரு சூப்பர்ஹீரோவின் அடையாளமாக உயர்த்தினார். அதனுடன் அந்தக் காலத்திலேயே , பூஜை அன்றே , ட்ரெய்லரை கையடக்க டிஜிட்டல் திரையில் வெளியிட்டு பிரம்மிக்க வைத்தார்.

முதல் ஃபிரேம் தொடங்கும் முன்பே… டைட்டிலால் படத்தைப் பற்றி பேச வைக்கும் இயக்குநர்.
இப்போது…

“ஒரண்ட”

ஒரே ஒரு தலைப்பால்…
ஆர்வத்தை தூண்ட வருகிறார். சாதரணமாக நாம் கடந்து போகும் வட்டார வழக்குச் சொல். நினைவில் நிற்கும் ஒரு தலைப்பாக்கிவிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *