Dawn Pictures நிறுவனத்தின் தயாரிப்பில், ஆகாஷ் பாஸ்கரன் எழுத்து இயக்கத்தில், அதர்வா முரளி, ப்ரீத்தி முகுந்தன், கயாடு லோகர் ஆகியோர் நடித்துள்ள படம் “இதயம் முரளி”. ஜூலை 10 ஆம் தேதி வெளியான மக்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படத்தின் நன்றி அறிவிப்பு பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. ஒட்டுமொத்த படக்குழுவினரும் கலந்து கொண்டு நன்றி தெரிவித்து பேசினர்.
நடிகர் அதர்வா பேசும்போது, “ஸ்கூல் முடிச்சிட்டு கடைசி நாள் வந்துட்டு இந்த ரீயூனியன் போய் நிப்பாங்கல அந்த மாதிரிதான் இருக்கு எனக்கு. ஆகாஷை ஒரு 3 வருஷமா எனக்கு தெரியும். முதல்ல என்ன ஒரு டைரக்டரா வந்து சந்திச்சாரு. இந்த டைட்டில்ல இந்த படம் இப்படி பண்ணலாம் அப்படின்னு சொன்னாரு. இன்னைக்கு இந்த படம் மக்கள் கொண்டாடுறாங்கன்னா, அதுக்கெல்லாம் முக்கியமான காரணம் பத்திரிக்கையாளர்கள் எல்லாரும் தான். தயாரிப்பாளர், இயக்குனர் ஆகாஷ்க்கு நான் நன்றி சொல்லணும். ரொம்ப நாள் ஆச்சு ஒரு லவ் ஸ்டோரி நம்ம தமிழ் சினிமால வந்து. இந்த மாதிரி ஒரு கலர்ஃபுல்லான ஒரு லைட் ஹார்ட்டட் லவ் ஸ்டோரியை கொண்டு வந்ததுக்கு ஆகாஷூக்கு நன்றி. மனோஜ் சாரும் நானும் நிறைய தடவை படம் பண்ணனும்னு பேசிட்டு இருந்தோம், ஆனா அமையல. இந்த படத்துல அமைஞ்சது ரொம்ப ரொம்ப சந்தோஷம். எல்லாரையும் லட்டு மாதிரி காமிக்கிறேன் அப்படின்னு சொன்னீங்க, அத காமிச்சிட்டீங்க சார், ரொம்ப ரொம்ப நன்றி. இன்னொரு டிஓபி சாயும் ஆகாஷூம் ரொம்ப வருஷமா ஃபிரண்ட்ஸ். கிளாஸ்மேட்ஸா இருந்தாங்க.
சில படங்கள் நம்ம போகும்போது எப்படி இருக்கும்னா, இந்த சீன் பெர்ஃபாம் எப்படி பண்ணனும் இந்த சீன் முன்னாடியே பிரிப்பேர் பண்ணிக்கணும் அந்த மாதிரில்லாம் இருக்கும். ஆனா இந்த படத்துக்கு போகும்போது ரொம்ப பிளாங்கான ஒரு மைண்ட்ல தான் போவோம். என்ன பண்ண போறோம்ங்கறது யாருக்குமே தெரியாது அங்க போய் நிப்போம் அங்க வந்துட்டு ஒரு ஒரு சீன் பேப்பர் கையில கொடுப்பாங்க.
என்கிட்ட வந்துட்டு அஞ்சு சாங் இருக்கும் அப்படின்னு சொன்னாங்க. அதுக்கப்புறம் ஆறாவது வந்தது ஏழாவது வந்தது. படத்தோட லாஸ்ட் மினிட், இன்னும் ரெண்டு சாங் வந்துருச்சு. நியூயார்க் போய் ஒரு விஷூவல் ஷூட் பண்ணிட்டு வந்தோம். அதுக்கு இதயா அப்படின்னு ஒரு பாட்டு கம்போஸ் பண்ணி தந்திருந்தாரு. நான் தமன் சார் கிட்ட எப்பவுமே சொல்லுவேன், இது தான் உங்களோட பெஸ்ட் சாங் அப்படினு. அதே மாதிரி படத்தோட கடைசி நாள் ரீரெக்கார்டிங் எல்லாம் முடிஞ்ச பிறகு ஒரு பாட்டு கொடுக்குறாரு. அது இப்ப எனக்கு பேவரைட் சாங் ஆயிடுச்சு.
நான் தமன் சார் கிட்ட போயிட்டு நான் கேப்பேன், ஏன்னா அவருக்கு தான் கரெக்டான ஜட்ஜ்மென்ட் இருக்கும்னு நான் நம்புவேன். ஏன்னா அவர் தான் மியூசிக் எல்லாம் பண்றாரு. தமன் சார் ஒரே வார்த்தை தான் சொன்னாரு பிளாக்பஸ்டர் அப்படின்னு சொல்லிட்டு போயிட்டே இருப்பாரு.
ஒரே ஒரு விஷயம் தான் ஆகாஷ் சொல்லிட்டு இருந்தாரு, ப்ரோ என்ன நம்புங்க ப்ரோ இது நல்ல படமா வந்துரும் அப்படின்னு. அந்த விதத்துல என் இயக்குனர் ஆகாஷ்க்கு நன்றி. பொதுவா இந்த மாதிரி டைட்டில் இதயம் முரளி அப்படின்னு வைக்கும்போது நான் எங்க அப்பாக்கு ஒரு சின்ன ட்ரிபியூட் ஏதாவது ஒண்ணு பண்ணனும் அப்படின்னு நினைச்சேன். ஆனா ஒரு நண்பரா ஆகாஷ் அத பண்ணிட்டாரு அப்படின்னு நினைக்கும்போது உண்மையிலேயே ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு. ஒவ்வொரு டைம்லயும் ஆகாஷ் எனக்கு சின்ன சின்ன சர்ப்ரைசஸ் தருவாரு. அந்த மாதிரி எனக்கு ஒரு சர்ப்ரைஸ் தந்தது தான் ஃபஹத் சார். அப்புறம் மாளவிகா அவங்களுக்கும் நன்றி. அவங்க ஒரு சின்ன ரோல் தான், கேட்ட உடனே பண்ணாங்க. ஒட்டுமொத்த குழுவுக்கு, பத்திரிக்கையாளர்களுக்கு, மக்களுக்கும் நன்றி” என்றார்.

