TNPPL சீசன் 2, சென்னை தமிழ் டைட்டன்ஸ் அணியின் புதிய ஜெர்சி அறிமுகம்!

தமிழ்நாடு பிரீமியர் பிக்கிள் பால் லீக் (TNPPL) தொடரின் இரண்டாவது சீசனை முன்னிட்டு, ‘சென்னை தமிழ் டைட்டன்ஸ்’ அணி தனது புதிய ஜெர்சியை (Jersey) சென்னையில் நடைபெற்ற பிரமாண்ட விழாவில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியது.

இவ்விழாவில் பேட்மிண்டன் உலக சாம்பியன் பி.வி. சிந்து மற்றும் முன்னணி ஸ்குவாஷ் வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு ஜெர்சியை வெளியிட்டனர். மேலும், பிரபல நடிகர் ‘சுப்ரீம் ஸ்டார்’ சரத்குமார் இந்த விழாவில் பங்கேற்று சிறப்பித்தார்.

தமிழ் டைட்டன்ஸ் அணியின் உரிமையாளர்களான நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் மற்றும் ‘நோவா லைஃப் ஸ்பேசஸ்’ (NOVA Life Spaces) செந்தில்குமார் ஆகியோர் உடன் இருந்தனர். அணியின் இந்த புதிய தோற்றம், வீரர்களின் துடிப்பான ஆற்றலையும் வரவிருக்கும் சீசனுக்கான தயார் நிலையையும் பறைசாற்றும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

விழாவில் பி.வி. சிந்து பேசியதாவது, “இந்தியாவில் பிக்கிள் பால் விளையாட்டு அதிவேகமாக வளர்ச்சி அடைந்து வருவது மகிழ்ச்சியளிக்கிறது. இதுபோன்ற தொடர்கள் விளையாட்டை மேம்படுத்துவதுடன், மக்களையும் ஒன்றிணைக்கின்றன.” என்றார்

ஜோஷ்னா சின்னப்பா பேசும்போது, “டிஎன்பிபிஎல் தொடர் புதிய திறமையாளர்களை உருவாக்க ஒரு சிறந்த தளம். தமிழ் டைட்டன்ஸ் அணியின் இந்த பயணத்தில் பங்கேற்பதில் பெருமிதம் கொள்கிறேன்.” என்றார்

சரத்குமார் பேசும்போது, “விளையாட்டுக்கு மக்களை ஒன்றுபடுத்தும் ஆற்றல் உண்டு. தமிழ் டைட்டன்ஸ் அணியின் இந்த அறிமுக சீசனில் அவர்களுடன் இணைந்திருப்பதை பெருமையாகக் கருதுகிறேன்.” என்றார்

புதிய பொலிவுடனும், உறுதியான இலக்குடனும் களமிறங்கும் சென்னை தமிழ் டைட்டன்ஸ் அணி, இந்த இரண்டாவது சீசனில் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றும் முனைப்போடு தயாராகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *