புதுமுக நடிகர் அருண்குமார் இயல்பான இளைஞனாக நடித்துள்ள படம் ‘நடு நாடு’. கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் தயாராகியுள்ள இந்த படத்தை இயக்குநர் சந்தோஷ் சேகரன் இயக்கியுள்ளார். இந்த படத்தில் அருண்குமார், அனு ஸ்ரீ, சம்பத் ராம், ‘கருத்தம்மா’ ராஜ ஸ்ரீ உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். செந்தில் மாறன் ஒளிப்பதிவு செய்ய, பரணி இசையமைத்திருக்கிறார். கிராமிய பின்னணியில் பொழுதுபோக்கு அம்சங்களுடன் தயாராகும் இந்த திரைப்படத்தை சாஹித்யா கிரியேசன் மற்றும் தி கிங் மூவி என்டர்டெய்ன்மென்ட் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர் ஆறுமுகம் மாணிக்கம் தயாரித்துள்ளார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. விழாவில் படக்குழுவினருடன் பல முக்கியமான ஜாம்பவான்கள் கலந்து கொண்டு படத்தை வாழ்த்திப் பேசினர்.
இயக்குனர் பேரரசு பேசும்போது, “இன்றைக்கு சிறிய படங்களுக்கு தியேட்டர் கிடைக்குமா கிடைக்காதா என்பது போன்ற விவாதங்கள் நடக்குற சூழல்ல நான் வந்திருக்கேன். டிஎஃப்டி ஸ்டூடென்ட்ஸூம் பெரிய வெற்றி கொடுத்திருக்காங்க. அசிஸ்டண்ட் டைரக்ட்ரா ஒர்க் பண்ணவங்களும் பெரிய வெற்றி கொடுத்துருக்காங்க. அசிஸ்டண்டா ஒர்க் பண்ணாமலே பர்ஸ்ட் படத்திலயே மணிரத்னம் சார் மாதிரி ஆட்கள் பெரிய ஹிட் கொடுத்துருக்காங்க. ஏன் சொல்றேன்னா இங்க வெற்றிக்கு இது தான்ங்கற இலக்கு இல்லை, படிச்சிருக்கணும், படிச்சிருக்க கூடாது, அசிஸ்டண்டா ஒர்க் பண்ணி இருக்கணும், ஒர்க் பண்ணிருக்க கூடாது அதெல்லாம் இல்ல. சினிமாவை உண்மை உண்மையா நேசிச்சு உண்மையா உள்வாங்கி இதுல ஜெயிக்கணும். அப்படித்தான் நம்ம சந்தோஷ் சேரன் வந்திருக்காரு. சினிமால வெறி, ஜெயிக்கணும்ங்கற வெறியில வந்திருக்காரு. கண்டிப்பா நடுநாடு பெரிய ஒரு வெற்றி நாடா உருவாக என்னுடைய வாழ்த்துக்கள்.
ரெண்டு பேரை பத்தி நான் பேசணும். ஒண்ணு இசையமைப்பாளர் பரணி வெள்ளி விழாவை தாண்டி அதாவது 25 வருஷத்தை தாண்டி இந்த சினிமாவுல பயணிச்சுக்கிட்டு இருக்கார். இன்னைக்கு சினிமாவுல ரெண்டு வருஷத்தை தாண்டுறதே பெரிய விஷயம். அஞ்சு வருஷத்த தண்ணிலயே மறந்துறாங்க, இப்போ இன்னைக்கு 25 வருஷம் கழிச்சும் ஒரு சிங்கம் மாதிரி உட்காந்து போட்ட அத்தனை பாட்டு ஹிட்டு. இன்னைக்கும் ஒரு பேரோட இருக்காருன்னா ஆண்டவன் கொடுத்த வரம் சார். இன்னொன்னு சினிமாவுல அதிசயம்னா என்னன்னா சினிமால சில அதிசயம் இருக்கும். 100 படம் பண்ணோம் 150 படம் பண்ணோம். அத்தனை ஹிட் கொடுத்தோம். சினிமாவில வெற்றி அடைந்த பின்பும் யார் ஒருவர் எளிமையா இருக்கிறாரோ அவர்தான் அதிசயம். பல ஹிட்ட கொடுத்ததுக்கு அப்புறம் எப்ப பார்த்தாலும் சரி, பரணி சார் அவ்வளவு எளிமையா இருப்பாரு. இவருதான் இந்த பாட்டல்லாம் ஹிட் கொடுத்தாரா? அப்படின்னு நம்ம அதிசயமா பாத்துட்டே இருக்கணும்.
அடுத்து இன்னொருத்தர் சம்பத் ராம். அவரும் 25 வருஷமா இந்த சினிமால பயணிச்சிட்டு இருக்காரு. ஒரு நடிகரா பயணிச்சு இன்னைக்கு ஒரு மெயின் ரோல், அதுவும் மாறுபட்ட வேடத்திலும் அவரை ஹைலைட் பண்ற அளவுக்கு ஒரு படத்தில் நடிச்சிருக்காருன்னா முழுக்க முழுக்க அது சம்பத் ராம் உழைப்பு, விடாமுயற்சி. ஆரம்ப காலட்டத்துல இருந்து எனக்கு தெரியும். அப்ப என்ன முயற்சி பண்ணாரோ அதே முயற்சி தான் இன்னைக்கும் இருக்கு. நீங்க 200 இல்ல 500 படம் நடிப்பிங்க.
கதை சொல்லி ஏமாத்துறதுல வல்லவர்கள் நாங்க. திருப்பாச்சி அப்ப நானும் ஏமாத்துனேன். அது விஜய் சாரை இல்ல, அவரை யாரும் ஏமாத்த முடியாது. அவர் பலருக்கும் தண்ணி காட்டுவாரு. இந்த நடுநாடு சீக்கிரம் சென்சார் ஆகி நிறைய திரையரங்குகள்ல ரிலீஸ் ஆகி பெரிய வெற்றி அடையணும்” என்றார்.

