வேரூஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பில் கௌதம் ராம் கார்த்திக் நடிக்கும் புதிய படத்துக்கு “ROOT” (Runnung out of Time) எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதில் கௌதம் ராம் கார்த்திக் ஒரு போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். இந்த படம் தற்போது பூஜையுடன் துவங்கியுள்ளது.
தனிஷ்தன் பெர்னாண்டோ, ராஜராஜன் கணநாசம்பந்தம், சஞ்சய் சங்கர் மற்றும் ஷைக் முஜீப் ஆகியோரால் தயாரிக்கப்படும் இந்த திரைப்படம், “நாளைய இயக்குநர் சீசன் 1” மூலம் அறிமுகமான இயக்குநர் சூரியபிரதாப் எஸ் இயக்கத்தில் உருவாகவிருக்கிறது. இவர், சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கிய ‘கோச்சடையான்’ படத்தில் அசோசியேட் டைரக்டர் ஆக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இயக்குனர் சூர்யபிரதாப் கூறும்போது, “இந்த படம் திரைக்கதை எழுதும் கட்டத்திலிருந்தே ஒரு சுவாரஸ்யமான படமாக இருந்து வருகிறது. ஒரு Scifi படமாக உருவாகும் ரூட் ஒரு பரபரப்பான க்ரைம் த்ரில்லராக இருக்கும். அத்துடன் ஓரு உணர்வுப் பூர்வமான படமாகவும் இருக்கும். கௌதம் ராம் கார்த்திக் ஒரு போலீஸ் அதிகாரியின் கதாபாத்திரத்திற்கு ஏற்ற வகையில் பொருத்தமாக இருக்கிறார். அவரது அர்ப்பணிப்பு மற்றும் சவாலான வேடங்களில் நடிக்கும் அச்சமற்ற அணுகுமுறை அவரை இந்த கதைக்கு சரியான தேர்வாக ஆக்குகிறது. அபர்சக்தி குரானாவை தமிழ் சினிமாவுக்கு வரவேற்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். அவர் ஒரு அற்புதமான நடிகர். இந்த படத்தில் கௌதமுக்கும் அபர்சக்திக்கும் இடையிலான ஒரு மோதல் படத்தின் சிறப்பம்சங்களில் ஒன்றாகும்” என்றார்.
வேரூஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் கூறும்போது, “உண்மையான, தாக்கத்தை ஏற்படுத்தும் சினிமாவை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் உருவானது தான் எங்கள் நிறுவனம். சூரிய பிரதாப் ரூட் கதையை விவரித்தபோது, இந்த கதை மூலம் எல்லைகளை தாண்ட முடியும் என்பது தெளிவாக இருந்தது. கௌதமின் உற்சாகமான ஆற்றல், அபர்சக்தி தமிழ் என்ட்ரி மற்றும் இயக்குனரின் கூர்மையான பார்வை ஆகியவற்றால் இந்த படம் ஒரு நல்ல அடையாளத்தை விட்டுச் செல்லும் என்று நாங்கள் நம்புகிறோம் ” என்றனர்.

