“காமராஜ்” திரைப்படத்தை நாட்டுடைமையாக்கக் முதலமைச்சருக்கு கோரிக்கை!

” காமராஜ் ” திரைப்படத்தின் இயக்குனர் A.J. பாலகிருஷ்ணன்
முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களுக்கு கோரிக்கை.

அன்புடையீர் வணக்கம்.

இந்நாட்டிற்கு தங்களின் தொண்டு சிறக்க வாழ்த்துகள்.

பெருந்தலைவர் காமராஜர் வாழ்வை ‘காமராஜ்’ என்ற பெயரில் திரைப்படமாகத் தயாரித்து வெளியிட்டோம். பலரது பாராட்டையும் பெற்றது அத்திரைப்படம். பெருந்தலைவருக்கான முதல் திரை ஆவணம் அதுதான்.

திரைப்படம் தயாரிக்க பல்வேறு தரப்பிடம் உதவியும், வங்கிக்கடனும் பெறப்பட்டது.

‘காமராஜ்’ திரைப்படத்துக்குப் பின் ‘WELCOME BACK GANDHI’ ‘திருக்குறள்’ போன்ற படங்களை தயாரித்தேன். அவைகளும் ‘காமராஜ்’ திரைப்படத்துக்கான கடனை திரும்பச்செலுத்த உதவவில்லை. அதனால் மிகுந்த மனச்சுமையுடன், கடன் வழங்கியவர்களை எதிர்கொள்ளும் துணிவின்றி, வாழ்வில் பயணிக்கிறேன்.

‘காந்தி’ திரைப்படத்துக்கு மத்திய அரசு உதவியது. ‘அம்பேத்கர்’ திரைப்படத்துக்கு மத்திய அரசும், மகாராஷ்டிரா அரசும் சுமார் 18 கோடி ரூபாய் உதவின. தமிழக அரசு ‘பெரியார்’ படத்துக்கு உதவியது

பெருந்தலைவர் காமராஜரை தாங்கள் ஒரு வழிகாட்டியாக கொண்டுள்ள நிலையில், தங்கள் அரசு எனக்கு உதவும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது.

நாட்டின் நலனுக்காகவே தயாரிக்கப்பட்ட ‘காமராஜ்’ திரைப்படத்தைத் தாங்கள் நாட்டுடைமையாக்கி, அப்படத்தை உலகத் தமிழர்களுக்கு சமர்ப்பிக்கும்படி வேண்டுகிறேன்.

அதற்கு ஈவுத் தொகையாக தாங்கள் ரூ.இரண்டு கோடி (RUPEES TWO CRORES) வழங்கும்படி வேண்டுகிறேன். நான் கடனைத் திருப்பிச் செலுத்தி, இத்திருப்பணியை மேற்கொண்டதற்கான மனத்திருப்தியை அடைய இயலும்.

தங்களின் இந்த உதவியினால் உலகத் தமிழர்கள் தங்களை வாழ்த்துவர். தங்கள் பணி பல்லாண்டு காலம் தொடர வாழ்த்துகள்.

பெருந்தலைவர் காமராஜரின் அருளாசிகள் தங்களுக்கு கிட்டட்டும்.
வாழ்க வளத்துடன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *