பல கலை மன்னனாக விளங்கும் ஷபீர் கல்லரக்கல்!

 

இன்றைய திரைப்பட உலகில் முழுமையான அர்ப்பணிப்பு உள்ள ஒரு கலைஞனாக எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு புதிய வரையறையாக இருக்கிறார் நடிகர் ஷபீர் கல்லரக்கல். நா சாமி ரங்கா, பெர்த்மார்க், கொண்டல், மற்றும் கன்னடத்தில் கவனம் ஈர்த்த அவரது அறிமுகமான பைரதி ரணகள் போன்ற படங்களில் அவரது பிரமிப்பூட்டும் நடிப்புகள் பார்வையாளர்களை வெகுவாக ஈர்த்துள்ளன.இதற்கு எல்லாம் காரணம் அவரது நடிப்பிற்கு பின்னால் இருக்கும் அவரது தொழில்பக்தி மற்றும் தனது கலைத்திறனை மேம்படுத்துவதற்கான விடாமுயற்சி பயணமே.

நடிப்பின் மீது மற்றும் உடல்மொழி மூலமாக கதையை சொல்லும் கலை மீது கொண்ட ஆழ்ந்த மரியாதை காரணமாகவே, பாரம்பரியமும் நவீனமும் சேர்ந்த பல்வேறு சண்டை மற்றும் கலைகளில் அவர் தன்னை முழுமையாக ஈடுபடுத்தியுள்ளார். இவை அனைத்தும் அவரது கலை வளர்ச்சிக்கான உண்மையான படிநிலைகள்.

அவர் சிறப்பு பெற்ற பயிற்சிக் கலைகள்:

பார்கோர் – இயக்கத்தில் சுறுசுறுப்பும், பயமின்றி நகர்வதற்கான தைரியமும்

சிலம்பம் – உடல் ரிதத்துடனும் கட்டுப்பாட்டுடனும் கூடிய பாரம்பரியத் தமிழ் கம்பு சண்டை கலை

பாக்சிங் மற்றும் கிக் பாக்சிங் – வேகம், தாக்கம் மற்றும் திரைப்பயன்பாட்டுக்கான நம்பகத்தன்மை இயக்கங்கள்.

மார்ஷியல் ஆர்ட்ஸ் மற்றும் அடிமுறை – தமிழரின் பழமையான போர்க்கலைகளில் வேரூன்றிய உண்மைத்தன்மை.

களரிப்பயட்டு – நெகிழ்வும் ஆயுதநடையில் நுட்பமுமுள்ள சங்க கால சண்டைக்கலை

காலடி குத்துவரிசை –காலடி மூலம் எதிராளியைத் தாக்கி, அவரைப் பாதுகாக்கும் ஒரு சண்டை முறை.

அவர் இதோடு நிற்கவில்லை — ஷபீர் தற்போது ஹிமாச்சலப்பிரதேசத்தில் உள்ள பீர் பில்லிங்கில் தொழில்முறை பராக்லைடிங் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். அதே ஒழுக்கம் மற்றும் ஈடுபாட்டுடன், அவர் தனது திறன்களை வான்வழி அதிரடி சாகச பயிற்சிகளுக்காகவும் விரிவுபடுத்தி வருகிறார்.

சினிமா மீதுள்ள காதல், ஒழுக்கத்தின் மூலம் தீவிரம் என
காலை நேரம் பயிற்சிக்கென்று எழுதல், ஒரு சண்டைக் காட்சியை முழுமையாக பழகி, அற்புதமாகச் செய்யப்படும் வரை பயிற்சி செய்வது, அல்லது ஒரு புதிய கலையை அடிப் படையிலிருந்து கற்றுக்கொள்வது என ஒவ்வொன்றையும் அவர் ஒரு மாணவனின் மனப்பாங்குடனும், ஒரு கலைஞனின் அர்ப்பணிப்பு உணர்வுடனும் அணுகுகிறார். அவரைப் பொறுத்த வரைக்கும் சினிமா என்பது வெறும் நடிப்பு அல்ல—அது ஒரு ஆயத்தம், மரபுகளுக்கான மரியாதை மற்றும் தொடர்ச்சியான சுயவளர்ச்சி.

அவர் தற்போது இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் மதராசி என்ற படத்தில் நடித்து வருகிறார். ஒவ்வொரு ஃப்ரேமிலும் அவர் நடிப்பிற்காக கொண்டு வரும் தீவிர அக்கறையும், துல்லியமும் கவனத்தை ஈர்க்கும்.

ஷபீர் வெறும் நடிப்பின் மூலம் மட்டுமல்ல — ஒவ்வொரு ஒழுக்கத்தின் மூலமும், அவர் சினிமாவையே உடலாக அனுபவித்து வருகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *