ஸ்டுடியோகிரீன் சார்பில் கேஈ ஞானவேல்ராஜா தயாரிக்க, இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தங்கலான். பார்வதி திருவொத்து, மாளவிகா மோகன், பசுபதி உள்ளிட்ட பலர் நடித்துள்ள, இந்த படத்துக்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். கோலார் தங்க வயலை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்த படம் ரிலீஸுக்கு தயாராக உள்ளது.
இந்த நிலையில் இந்த படத்தின் வெளியீட்டு தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது தயாரிப்பு நிறுவனம் ஸ்டுடியோகிரீன். வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தில் உலகம் முழுக்க வெளியாக உள்ளது. விரைவில் படத்தில் இசை வெளியீட்டு விழா நடைபெறும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.