சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை இயக்கும் சிபி சக்கரவர்த்தி!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும், பெரிதும் எதிர்பார்ப்பில் உள்ள திரைப்படமான ‘#THALAIVAR173’ படத்தினை இயக்கும் இயக்குநரை ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேசனல் (RKFI) அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறது. ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேசனல் (RKFI) நிறுவனம் சார்பில் கமல்ஹாசன் மற்றும் ஆர். மகேந்திரன் தயாரிக்கும், இந்த திரைப்படத்தை இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்க, அனிருத் இசையமைக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்ப குழுவினர் மற்றும் தயாரிப்பு பணிகள் குறித்த கூடுதல் தகவல்கள் உரிய நேரத்தில் அறிவிக்கப்படும்.

#THALAIVAR173 திரைப்படம் 2027 ஆம் ஆண்டு பொங்கல் திருநாள் அன்று பிரம்மாண்டமான வெளியீடாக திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *