ஆகஸ்ட் 29-ல் வெளியாகும் சமுத்திரக்கனி, பரத் நடித்த “வீரவணக்கம்”!

பிரபல மலையாளத் திரைப்பட இயக்குனர் அனில் வி. நாகேந்திரன் முதன் முறையாக தமிழில் இயக்கி சமுத்திரக்கனி மற்றும் பரத் முதன்முறையாக இணைந்து நடித்திருக்கும் படம் “வீரவணக்கம்” .

புரட்சிகரமான சமூக கருத்துக்களை கொண்ட இந்தபடம் தமிழ்நாடு மற்றும் கேரளாவில் படப்பிடிப்பு நடைபெற்றிருக்கிறது. சம காலத்தில் நடைபெறும் சமூக அவலங்களும், கடந்த காலத்தில் நடந்த புரட்சிகளும் இந்த கதையில் முக்கியமான ஒரு கருத்தை நமக்கு உணர்த்தும் வண்ணம் படமாக்கப்பட்டிருக்கிறது.

சமீபத்தில் இத்திரைப்படத்தின் பிரத்தியேகக் காட்சி திரையிடப்பட்டது.  அதில் பல பிரபலங்களின் பாராட்டுக்களையும் பெற்றுள்ளது. இந்தப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் தேசிய விருது பெற்ற நடிகை சுரபி லக்‌ஷ்மி நடித்திருக்கிறார்.என்கிறார் படத்தின் இயக்குனர் அனில் வி. நாகேந்திரன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *