முதல் நாள் வசூலில் சாதனை படைத்த ‘சையாரா’!

ஒய். ஆர். எஃப் மற்றும் மோஹித் சூரியின் ‘சையாரா’ முதல் நாளில் இந்தியாவில் 21.25 கோடி ரூபாய் வசூல் செய்து மிகப்பெரிய ஓபனிங்கை தந்துள்ளது. அஹான் பாண்டே மற்றும் அனீத் பதா ஆகியோரை ஒரே இரவில் நட்சத்திரங்கள் மற்றும் ஒட்டுமொத்த இந்திய தேசத்தின் காதலர்களாக மாற்றியிருக்கிறது.

முதல் நாள் வசூலின் சிறப்பம்சங்கள்:

மிகப்பெரிய முதல் நாள் நிகர பாக்ஸ் ஆபிஸ் இந்திய சினிமா வரலாற்றில் ஒரு அறிமுக நடிகர்களின் படம்.

இந்திய சினிமாவில் மிகப்பெரிய முதல் நாள் வசூலை தந்த ஒரு ‘காதல் கதை’.

2000 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஒரு அறிமுகப் படத்திற்கு மிகப்பெரிய முதல் நாள் டிக்கெட் விற்பனை.

25 ஆண்டுகளில் ஒரு அறிமுக படத்திற்கான முதல் நாளில் அதிக டிக்கெட்டுகள் விற்கப்பட்டன-கஹோ நா… ப்யார் ஹை மற்றும் ரெஃப்யூஜி (2000)

இயக்குனர் மோஹித் சூரியின் மிகப்பெரிய ஓபனிங்.

கோவிட்டுக்கு பிந்தைய ஒரு காதல் கதைக்கான மிக உயர்ந்த முதல் நாள்.

கோவிட்டுக்குப் பிறகு ஒரே நாளில் ₹20 கோடியை தாண்டிய முதல் காதல் கதை.

இந்தியா முழுவதும் வெறும் 8,000 காட்சிகளுடன் இந்த வசூலை பெற்றுள்ளது. ₹20 கோடி வசூலுக்கு பொதுவாக தேவைப்படும் சராசரி காட்சிகள் எண்ணிக்கை 18,000, ஆனால் அதில் பாதிக்கும் குறைவான காட்சிகளுடன் இந்த வசூலை தந்துள்ளது.

முக்கிய தேசிய மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் பல ஹவுஸ்புல் காட்சிகள்.

இவை அனைத்தும் நடிகர்கள் எந்தவொரு வழக்கமான கார்க்கெட்டிங் உத்திகளில் ஈடுபடாமலே கிடைத்த வெற்றி. நேர்காணல்கள் இல்லை, ரீல்ஸ் இல்லை, இன்ஃப்ளுயன்ஸர்ஸ் இல்லை. முழுக்க முழுக்க வலுவான கண்டெண்ட்டினால் மட்டுமே இது சாத்தியமாகியிருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *