Sony LIV-ன் KanKhajura-வில் Ashu ஆக மாறிய Roshan Mathew!

Sony LIV-இன் தரமான புதிய வெப் தொடரான KanKhajura-வில் Roshan Mathew, மௌனத்தில் புதைந்து கிடந்தும், கடந்தகால சம்பவங்களால் பயந்து கிடந்தும், யாராவது நம்மை ஏற்றுக் கொள்ள மாட்டார்களா என்று ஏங்கும் Ashu என்ற கதாப்பாத்திரத்தில் களமிறங்குகிறார்.

இது பற்றி Roshan Mathew கூறும் பொழுது, “இது எனக்கு வெறும் ஒரு வேடம் மட்டுமல்ல; இது ஒரு அழைப்பு”. “இந்தக் கதாப்பாத்திரம் எளிதில் கிடைக்கக் கூடியது அல்ல என்பது எனக்குத் திடீரெனத் தெரிந்தது. என்னைச் சார்ந்த Ashu எப்படி இருப்பார் என்பதை கண்டுபிடிக்க அந்த வாய்ப்பை இழக்க விரும்பவில்லை,” என்கிறார் Mathew.

மேலும் கண்களுக்கு புலப்படாத உணர்வுச் சிக்கல்களுக்கு அடியில் இருக்கிற Ashu-வின் கேரக்டர்தான் Roshan-ஐ இழுத்தது. மேலும் இந்தக் கதாபாத்திரம் பற்றி கூறும் பொழுது, “அவன் வித்தியாசமான முறையில் நடந்தாலும், உண்மையில் தெளிவான மனிதன். அவனுக்கு ஒரு குடும்பத்தில் இருக்கும் உணர்வு வேண்டும், ஒரு கூட்டத்தில் ஒருவனாக இருக்க வேண்டும. அவ்வளவுதான்.” Ashu-வின் இந்தப் பன்முகக் கதாபாத்திரத் தன்மைக்கு முக்கிய காரணமாக, இயக்குநர் Chandan Arora-வுடன் உள்ள ஒத்துழைப்பை Roshan குறிப்பிட்டார். “Chandan sir, Ashu-வின் வழிமுறைகள் என்னவாக இருக்கும், ஒவ்வொரு சூழ்நிலையையும் அவன் எப்படி எதிர்கொள்வான், ஒவ்வொரு திருப்பங்களின் போதெல்லாம் என்னென்ன சாத்தியங்கள் இருக்கின்றன என்பதைப் புரிந்து கொள்ள உதவினார்,” என்று கூறினார் .

KanKhajura என்பது கோவாவை மையமாகக் கொண்டு உருவான (அங்கே அமைதி இரகசியங்களை மறைக்கும். குற்ற உணர்வுகள் விலக மறுக்கும்..) ஒரு உளவியல் த்ரில்லர் தொடர். . இரண்டு பிரிந்துபோன சகோதரர்கள் தங்களது கடந்தகாலத்தை எதிர்கொள்கையில்,அவர்களது நினைவுகள் ஒரு ஆபத்தான யதார்த்தமாக மாறுகின்றன. Ajay Rai தயாரித்து, Chandan Arora இயக்கியுள்ள இந்தத் தொடரில் Mahesh Shetty, Mohit Raina, Ninad Kamat, Roshan Mathew, Sarah Jane Dias, Trinetra Haldar மற்றும் Usha Nadkarni ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

புகழ்பெற்ற இஸ்ரேலிய தொடரான Magpie அடிப்படையில் உருவான இந்தக் கதை, yes Studios-இன் உரிமையில் Adam Bizanski, Omri Shenhar மற்றும் Dana Eden ஆகியோரால் மறுஉருவாக்கம் செய்யப்பட்டு, Donna மற்றும் Shula Productions நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டுள்ளது. சிதறிப்போன குடும்பங்கள், துரோகம், வாழ்வுக்கும் குற்ற உணர்வுக்கும் இடையிலான மெல்லிய கோடு ஆகியவற்றை நுட்பமாகக் கூறும் ஒரு மையக் கதை. அதிலும் Roshan Mathew ஏற்கும் Ashu என்ற கதாப்பாத்திரம் உங்களால் எளிதில் மறக்க முடியாது.

KanKhajura – மே 30 முதல் Sony LIV-இல் மட்டும்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *