‘மரகத நாணயம்’ இரண்டாம் பாகம் பிரம்மாண்ட பூஜையுடன் துவக்கம்!

கடந்த 2017ஆம் ஆண்டு வெளியாகி அதன் நகைச்சுவை கலந்த கதைக்களத்திற்காக பெரும் வெற்றி பெற்ற ‘மரகத நாணயம்’ திரைப்படத்தின் தொடர்ச்சியாக உருவாகும் ‘மரகத நாணயம்2’ திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது.

சிவராத்திரியை முன்னிட்டு பிப்ரவரி 16, 2026 சென்னையில் பிரம்மாண்ட பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கியது. நடிகர் கார்த்தி கிளாப்போர்டை அடித்து துவக்கி வைத்தார். நடிகர் ஆர்யா கேமராவை ஆன் செய்தார். இயக்குநர் வெங்கட்பிரபு ‘கேரமா ரோலிங், ஆக்‌ஷன்’ என சொல்லி படப்பிடிப்பை துவக்கி வைத்தார். ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரியுடன் நட்பில் உள்ள பல முக்கிய திரைபிரபலங்களும் இந்த பூஜையில் கலந்து கொண்டு தங்கள் வாழ்த்துகளை தெரிவித்தனர்.

பேஷன் ஸ்டுடியோஸ், தங்கல் டிவி, ஆர்டிசி மீடியா, ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி மற்றும் குட் ஷோ ஆகிய பேனர்களின் கீழ் சுதன் சுந்தரம், மணீஷ் சிங்கால், துர்காராம் சௌத்ரி, தேவ் மற்றும் கேவி துரை ஆகியோர் இந்தப் படத்தை தயாரிக்க, ‘மரகத நாணயம்’ படத்தை இயக்கிய ஏஆர்கே சரவன் இரண்டாம் பாகத்தையும் இயக்குகிறார்.

’மரகத நாணயம்2’ திரைப்படம் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்தே ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. முதல் பாகத்தை விடவும் இரண்டாம் பாகத்தில் அதிக நகைச்சுவை, மேஜிக் மற்றும் சுவாரஸ்யமான திரையனுபவம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெறவுள்ளதாகவும், படம் குறித்தான அடுத்தடுத்த அப்டேட்கள் விரைவில் வெளியாகும் எனவும் படக்குழு தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *