குமார சம்பவம் – விமர்சனம்!

சின்னத்திரை புகழ் நடிகர் குமரன் தங்கராஜன் கதாநாயகனாக அறிமுகமாகும் படம் ‘குமார சம்பவம்’. இயக்குநர் பாலாஜி வேணுகோபால் இயக்க,  பால சரவணன், லிவிங்ஸ்டன், வினோத் சாகர் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். குமரனின் சம்பவமாக மாறியதா இந்த படம், பார்க்கலாம்.

படத்தின் கதைப்படி, குமரன் எனும் இளைஞன் மற்றும் அவரது தாத்தா ஜி.எம். குமாரின் வாழ்க்கையை மையமாகக் கொண்ட இந்த கதையில், குமரனின் வீட்டு மேல் மாடியில் வசிக்கும் சமூக ஆர்வலர், போராளி இளங்கோ குமரவேல் கொலை செய்யப்பட்டு கிடக்கிறார். அவரது குடும்பம் தான் கொலை செய்திருக்கக் கூடும் என்ற நோக்கில் விசாரணையை துவக்குகிறது போலீஸ். அதன் விவரிப்பில் விரியும் கதையே மீதிக்கதை, கொலை காரணம் என்ன? ஒவ்வொருவரின் கதாபாத்திரன் என்ன என்பதை சொல்வதே மீதிக்கதை.

‘ஈரமான ரோஜாவே’, பாண்டியன் ஸ்டோர்ஸ் போன்ற டிவி தொடர்களில் நடித்து மிகவும் பிரபலமான குமரன், இப்போது நாயகனாக மாறி, தனது நடிப்பால் ரசிகர்களின்  கவனத்தை ஈர்த்துள்ளார். நாயகியும் அவருக்கு கொடுக்கப்பட்ட பங்கை செவ்வனே செய்திருக்கிறார். போராளி இளங்கோ குமரவேல் வழக்கம் போல தன் நடிப்பில் அசத்துகிறார். ஜி.எம்.குமார், பால சரவணன், வினோத் சாகர், ஜி.எம்.குமார், லிவிங்க்ஸ்டன் என மற்ர நடிகர்களும் அவர்கள் பங்கை சிறப்பாகவே செய்திருக்கிறார்கள்.

ஜெகதீஷ் ஒளிப்பதிவும், மதன் எடிட்டிங்கும் படத்துக்கு பலமாக அமைந்துள்ளது. இசையமைப்பாளர் அச்சு ராஜமணி இசையில் பாடல்கள் பின்னணி இசையிலும் குறையில்லை.

இயக்குனர் பாலாஜி வேணுகோபால் நகைச்சுவை கலந்த நல்ல ஒரு கலகலப்பான படத்தையே தந்துள்ளார். கிரேஸ் மோகன் ஸ்டைலில் வசனங்களும் படத்தின் காமெடி சீன்களை மெறுகேற்றுகிறது. நடிகர்களை மிகச் சரியாக தேர்வு செய்ததிலும், அவர்களை சரியாக வேலை வாங்கிய விதத்திலும் 50 சதவீத வெற்றி என்றால் அவரது திரைக்கதை, வசனத்தில் மீத வெற்றியை சுவைத்துள்ளார் இயக்குனர். மொத்தத்தில், ஆர்பாட்டமில்லாத, அதே சமயம் மனதை நிறைவாக்கும் சம்பவமாக அமைந்துள்ளது இந்த ‘குமார சம்பவம்’.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *