தமிழில் ரீமேக் ஆகும் ஸ்ரீலீலா நடித்த “கிஸ்”

ஸ்ரீ லீலா நடிப்பில் 2019 ம் ஆண்டு கன்னடத்தில் வெளியாகி 100 நாட்கள் ஓடி வசூல் சாதனை படைத்த ” கிஸ் ” படம் தமிழில் ” கிஸ் மீ இடியட் ” என்ற பெயரில் ரீமேக் செய்யப்படுகிறது.

கதாநாயகனாக வீராட் நடிக்கிறார். மற்றும் ரோபோ ஷங்கர், நாஞ்சில் விஜயன், அஸ்வதி இவர்களுடன் இன்னும் ஏராளமான நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள். கன்னடத்தில் இந்த படத்தை இயக்கிய A.P.அர்ஜுன் தமிழிலும் இயக்குகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு 23-04-2025 அன்று பூஜையுடன் துவங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

ஸ்ரீ லீலா தெலுங்கு, கன்னடம் , இந்தி படங்களில் நடித்து புகழ் பெற்றிருந்தாலும் தமிழுக்கு இதுவே முதல் படம். இவர் நடித்த புஷ்பா 2 சினிமா வரலாற்றிலேயே ஒரு மைல் கல்லாக வசூலில் மிகப் பெரிய சாதனை படைத்தது. இவர் அல்லு அர்ஜுன்,மகேஷ் பாபு ,ரவி தேஜா, புனித் ராஜ்குமார், பாலகிருஷ்ணா ,ராம் பொத்தினேனி , நிதின் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது சுதா கொங்கரா இயக்கத்தில் பராசக்தி படத்தில் சிவகார்த்திகேயனுடன் ஜோடியாக நடித்துவருக்கிறார்.

செண்டிமெண்ட் கலந்த
இளமை ததும்பும் காதல் கதையாக “கிஸ் மி இடியட்” உருவாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *