மது நாட்டுக்கும், வீட்டுக்கும் கேடு என்பதை வலியுறுத்தும் “கல்யாணி”!

TRILOKA international film award winner எழில் அரசன் இயக்கும் கல்யாணி படத்தின் பூஜை மிக பிரமாண்டமாக இனிதே நடைபெற்றது. இவ்விழாவிற்கு பிரபல ஸ்டண்ட் இயக்குனர் ஜாகுவார் தங்கம் தலைமையேற்று சிறப்பித்தார். மேலும் கேபிள் சங்கர், சிங்கப்பூர் தீபன், சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

படத்தைப் பற்றி இயக்குனர் கூறும் பொழுது, “1990, 95 ஆம் ஆண்டு காலகட்டத்தில் அனைவராலும் பரபரப்பாக பேசப்பட்ட ஒரு பெயர் கல்யாணி. இதை அனைவராலும் மறக்கவும் முடியாது, மறைக்கவும் முடியாது. இந்த படம் காதல், நட்பு , உறவு என கொண்டாட்டத்தில் தொடங்கி கொண்டாட்டத்தில் முடியும் . மது நாட்டுக்கும்,
வீட்டுக்கும் கேடு என்கிற உன்னத வரிகளை உணர்வுபூர்வமாக இப்படத்தில் சொல்ல இருக்கின்றோம்.

இதனிடையில் இந்த காலகட்டத்தில் தேவையான முக்கிய பிரச்சினைகளை எங்கள் கல்யாணி படம் பேசும் என்று கூறிய இயக்குனர் N.எழில் அரசன் மேலும் தான் இயக்கிய முதல் IR – 5 குறும்படமே ட்ரை லோக்கா இன்டர்நேஷனல் பிலிம் விருது வாங்கியது பெருமையாக தெரிவித்த அவர் பிரபல நட்சத்திர தம்பதிகளான
சூர்யா,ஜோதிகா அவர்களின் மகள் தியா இதேபோல் விருதை அவர் இயக்கிய படத்திற்கு வாங்கி இருப்பதும் பெருமையாக தெரிவித்தார். நிச்சயமாக நல்ல ஒரு தியேட்டர் கொண்டாட்டமான படமாக இது இருக்கும். என இந்த படத்தின் இயக்குனர் எழில் அரசன் நம்பிக்கையுடன் வெளிப்படுத்தினார்.

இந்த படத்தின் இயக்குனரின் சகோதரரும் முதல் குறும்படத்தின் தயாரிப்பாளருமான N.முகில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். படத்தின் படத்தின் நாயகன் நாயகி மற்றும் இதர நடிகைகள் விபரம் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். படத்தின் ஒளிப்பதிவு பணிகளை லெனின் சந்திரசேகரன் மேற்கொள்கிறார். படத்தின் தயாரிப்பு பணிகளை P.சரவணவேல் கவனிக்கிறார். ஈஸ்வரி ப்ரோடக்சன் சார்பில் M.R .ஈஸ்வரி படத்தை தயாரிக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *