ஜீவா நடிக்கும் புதிய படம் “தலைவர் தம்பி தலைமையில்”!

கண்ணன் ரவி குரூப் சார்பில் கண்ணன் ரவி தயாரித்து வழங்க, இயக்குநர் நிதிஷ் சஹதேவ் இயக்கத்தில்,  முன்னணி நட்சத்திர நடிகர் ஜீவா நாயகனாக நடிக்கும் புதிய படம் “தலைவர் தம்பி தலைமையில்”. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று  அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

குடும்பங்களோடு சேர்ந்து அனைவரும் கொண்டாடும் வகையில், உணர்வுப்பூர்வ அம்சங்களுடன்  காதல், காமெடி கலந்து கலக்கலான கமர்ஷியல் படமாக “தலைவர் தம்பி தலைமையில்” உருவாகியுள்ளது.

இப்படத்தில்  ஜீவா நாயகனாக நடிக்க தம்பி ராமையா, இளவரசு, பிராத்தனா நாதன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். தமிழ் சினிமாவில் தொடர்ந்து வித்தியாசமான களங்களில் பல வெற்றிப்படங்களை தந்து வரும் கண்ணன் ரவி குரூப் நிறுவனம் சார்பில் கண்ணன் ரவி இப்படத்தை பிரம்மாண்டமாகத் தயாரித்துள்ளார்.

இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. விரைவில் டிரெய்லர் மற்றும்  இசை வெளியீடு பற்றிய அறிவிப்புகள் அதிகாரப்பூர்வமாக வெளியாக இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *