பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி ஜூலை 12ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் திரைப்படம் “இந்தியன் 2”. ஆரம்பத்தில் கலவையான விமர்சனங்களை பெற்ற இந்த படத்தை குடும்ப ரசிகர்கள் வெகுவான ரசித்தனர்.
படத்தின் நீளம் அதிகமாக இருப்பதாக வந்த கருத்துக்களை தொடர்ந்து இந்தியன் 2 படத்தின் நீளத்தை 12 நிமிடங்களை குறைத்து புதிய பதிப்பை திரையரங்குகளில் வெளியிட்டு இருக்கிறார்கள். தற்போது உலகம் முழுதும் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் இந்த புதிய பதிப்பு வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.