2017ஆம் ஆண்டு பிக் பாஸ் முதல் சீசனில் இயக்குனர் ஷங்கர் மற்றும் உலக நாயகன் கமல்ஹாசன் இணையும் ‘இந்தியன் 2’ படத்தின் அறிவிப்பு வெளியானது. 2019 பாராளுமன்ற தேர்தல் சமயத்தில் ரிலீஸ் செய்வோம், இது தான் என் கடைசி படம் எனவும் கமல் அறிவித்திருந்தார். ஆனால் பல தடைகள் மற்றும் குளறுபடிகளால் திட்டமிட்ட வேகத்தில் படம் முடியவில்லை. விக்ரம் வெற்றிக்கு பின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் உள்ளே வர படம் ஜெட் வேகத்தில் ஷூட்டிங் நடந்து வருகிறது. இந்தியன் 2, இந்தியன் 3 என இரண்டு பாகங்கள் எனவும் தயாராகி வருகிறது.
தற்போது முதல் கட்டமாக இந்த படத்தின் முதல் பாகமான அதாவது இந்தியன் 2 படத்தை வெளியிட ஏற்பாடுகள் ஜரூராக நடந்து வருகின்றது. லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இன்னும் ஒரு பாடல் காட்சி மட்டும் எஞ்சி உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இப்படத்தின் ரிலீஸ் தேதியை லைகா நிறுவனமே அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது. அதன் படி இந்தியன் 2 திரைப்படத்தை வருகிற ஜூன் மாதம் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். தேதி குறித்து குறிப்பிடவில்லை, ஆயினும் நமக்கு கிடைத்த தகவலின்படி ஜூன் 13ஆம் தேதி உலகமெங்கும் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது.