Game of Change – Review

Siddharth Rajasekhar Productions நிறுவனம் சார்பில் சித்தார்த் ராஜசேகர் மற்றும் மீனா சாப்ரியா தயாரிக்க, புகழ்பெற்ற மலையாள இயக்குநர் சிதின் இயக்கியுள்ள docu-fiction வகை திரைப்படம் “Game of Change”. உலகளாவிய பார்வையாளர்களிடம் கொண்டு சேர்க்கும் நோக்கில் ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய 6 முக்கிய மொழிகளில் வெளியாகியுள்ளது இந்த திரைப்படம்.

ப்ளேர் சிங்கர், சித்தார்த் ராஜசேகர், சுரேந்திரன் ஜெயசேகர், டினாஸ், சோனியா சேகர், கீதா மிக்கிலினேனி என பல தேசிய மற்றும் சர்வதேச அளவிலான பல நட்சத்திரங்களின் பங்களிப்பில் ஒரு உலகளாவிய மனப்பான்மையோடு உருவாகியுள்ளது இந்த படம்.

அடிப்படையில் இந்த Game of Change எதைப் பற்றிப் பேசுகிறது என்பதை கிரகிக்க சாதாரண ரசிகர்களுக்கு கொஞ்சம் நேரம் எடுத்துக் கொள்ளும். மேலோட்டமாக பார்க்கும்போது 5ஆம் நூற்றாண்டிலிருந்து 12ஆம் நூற்றாண்டு வரை பரவி இருந்த நாளந்தா பல்கலைக்கழகம் அறிவுக் களஞ்சியமாக விளங்கியது. அதன் பின் பக்தியார் கில்ஜியின் தாக்குதலால் அழிக்கப்பட்டதையும் நினைவு கூர்கிறது. அந்த வரலாற்றுப் பின்னணியை கதைப் போக்கில் சொல்லும் இந்த திரைப்படம், ஆற்றலையும், ஊக்கத்தையும் பார்வையாளர்களுக்கு ஊட்டுகிறது.

இந்த திரைப்படம் தனிநபர்களின் வாழ்க்கையை மாற்றியமைத்த சாதாரண தருணங்களைப் பற்றிப் பேசுகிறது. இது நாளந்தா பல்கலைக்கழகத்தின் பின்னணியில் இந்திய வரலாற்றின் உண்மையான நிகழ்வுகளையும், நவீன காலப் பயிற்சியாளர்களின் பங்களிப்பையும் காட்டுகிறது. கல்வி, பயிற்சி மற்றும் தனிப்பட்ட மாற்றத்தின் முக்கியத்துவம் குறித்து இப்படம் பேசுகிறது. சாதாரண தருணங்கள் எப்படி அசாதாரண மாற்றங்களை ஏற்படுத்தும் என்பதை ஊக்கமளிக்கும் கதைகள் மூலம் விவரிக்கிறது.

நாளந்தாவின் பார்வை, தாக்கம் மற்றும் இலக்கை ஆராய்வதோடு, transformative coaching-ன் மூலம் கல்வியின் மீள் எழுச்சியைக் காட்டுகிறது. படம் வலுவான மற்றும் மாற்றத்தை விரும்பும் நபர்களின் கதைகளை முன்னிலைப்படுத்துவது படத்தை பார்ப்பவர்களுக்கு தாக்கத்தை ஏற்படுத்தலாம்.

படத்தில் ஆங்காங்கே பின்னணியின் வரும் metaphorical அம்சங்களும், அதை காட்சிப்படுத்திய விதமும் சர்வதேச தரத்தில் அமைந்து படத்துக்கு கூடுதல் சிறப்பை தந்திருக்கிறது.

ப்ளேர் சிங்கர், சித்தார்த் ராஜசேகர், சுரேந்திரன் ஜெயசேகர், டினாஸ், சோனியா சேகர், கீதா மிக்கிலினேனி உள்ளிட்ட பிரபலங்களின் கதைகள், வளர்ச்சி, நம்பிக்கை மற்றும் மாற்றத்தின் செயல்முறையை உணர்த்துகிறது.

மொத்தத்தில், “கேம் ஆஃப் சேஞ்ச்” திரைப்படம் ஒரு அர்த்தமுள்ள உள்ளடக்கத்துடன், உத்வேகம் மற்றும் கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் ஒரு திரைப்படமாக அமைந்திருக்கிறது. உத்வேகம் மற்றும் தனிப்பட்ட வளர்ச்சிக்கு உதவும் ஒரு படமாக இது நிச்சயம் இருக்கும்.

இந்த படம் ஒரு டாகு-ஃபிக்ஷன் படம் என்பதால் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்வது சந்தேகமே. குழுவுடன் சேர்ந்து பார்ப்பதை விட தனியாக அமர்ந்து பார்க்கும்போது அவர்களுக்குள் ஒரு பெரும் தாக்கத்தை, மாற்றத்தை ஏற்படுத்தும் என்பது நிச்சயம். Game of Change ஒரு துவக்க முயற்சியாக பாராட்டுக்குரியது, எதிர்காலத்தில் ஒரு சிறந்த தொடராக மாறும் வாய்ப்புகளும் பிரகாசமாகவே உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *