சில நடிகர்கள் ரியல் லைஃபில் இருப்பது போன்றே படத்திலும் அவர்களாகவே தெரிவார்கள். சிலர் வெளியில் வேறு ஒரு ஆளாகவும், திரையில் அப்படியே வேறு மாதிரியாக தங்கள் நடிப்பால் மாறி நிற்பார்கள். அப்படிப்பட்ட நடிகராக உருமாறி நிற்கிறார் அர்ஜூன் தாஸ். படத்துக்கு படம் தனித்துவமான நடிப்பால், வேறு வேறு பரிமாணங்களில் ஜொலிக்கிறார் அர்ஜூன் தாஸ். கைதி, ரசவாதி, அநீதி படங்களில் அவர் ஏற்ற கதாபாத்திரங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகம்.
தற்போது அர்ஜூம் தாஸ் நடிப்பில் வெளியாகியிருக்கும் பாம் படத்தில் நாம் இதுவரை பார்க்காத ஒரு அர்ஜுன் தாஸாக திரையில் தெரிகிறார். கிராமத்து பின்னணியில் உருவாகியுள்ள இந்த படத்தில் அச்சு அசலான ஒரு கிராமத்து இளைஞராகவே நம் கண்முன் நிற்கிறார்.
முதல் பாதி முழுக்க அமைதியான, எமோஷனல் இளைஞராக நல்ல நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். இரண்டாம் பாதியை தன் தோளில் சுமந்திருக்கிறார். அவரது குரலாலும் படத்தை மெருகேற்றுகிறார். காதல் காட்சிகளிலும் ரசிக்க வைத்திருக்கிறார். இந்த தனித்துவமான கதையை தேர்ந்தெடுத்து நாயகனாக நடித்ததற்கே அவருக்கு சல்யூட். அர்ஜூன் தாஸ் சினிமா கேரியரில் பாம் படம் நிச்சயம் ஒரு மறக்க முடியாத, முக்கியமான படமாக அமைந்துள்ளது என்பதே நிதர்சனம்.

