A Beautiful Breakup – விமர்சனம்!

காதல் மற்றும் த்ரில்லர் இணைந்த திரைப்படமாக உருவாக்கப்பட்டிருக்கும் படம் “A Beautiful break up”. இசைஞானி இளையராஜா இசையமைப்பில் வெளியாகியிருக்கிறது இந்தப் படம்.

காதல் ஜோடி தனிமையான எஸ்டேட்டிற்கு செல்கிறார்கள் அறியாமலே அங்கு சிக்கியுள்ள ஆவிகளை எழுப்புவதில் கதை வேகமெடுக்கிறது.

புதைந்த ரகசியங்கள், மறைந்து கிடக்கும் உணர்வுகள் மற்றும் அமானுஷ்ய அம்சங்கள் இணைந்து, இதயம் உடைக்கும் ஒரு உணர்ச்சி அனுபவமாக படம் நகர்கிறது. சில உறவுகள் எளிதில் மறையாது என்பதைக் காட்சிப்படுத்தும் விதம் நெகிழ்ச்சியூட்டுகிறது.

முன்னணி நடிகர்களின் நடிப்பு படத்தின் மிகப்பெரிய பலம். தக்ஷ் தனது சிறப்பான நடிப்பால் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகிறார்;
மதில்டா பாஜர் உண்மைத் தன்மையோடு சிறப்பாக நடித்திருக்கிறார்
அவர்களுக்கிடையேயான காதல் இயல்பாகவும் நம்பத்தகுந்ததாகவும் இருக்கிறது.

இயக்குனர் அஜித் வாசன் உக்கினா கதையை சீரான ஓட்டத்தில் நகர்த்துகிறார்.
ஒளிப்பதிவு, ஃப்ரேமிங், லைட்டிங், கலர் கிரேடிங் ஆகியவை படத்திற்கு பலம்.

இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜா அவர்களின் இசை குறிப்பாக அவரது 1,422வது திரைப்படமாக அமைந்துள்ள இந்தப் படம் மேலும் ஒரு மணிமகுடம்.

A Beautiful Breakup மென்மையான அமானுஷ்ய அம்சங்களை விரும்புபவர்களுக்கு ஏற்ற, தாக்கமிக்க மற்றும் நினைவில் நிற்கும் திரைப்படமாக திகழ்கிறது.

SK Cinemas rating: ⭐⭐⭐⭐ (4/5)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *