பிக் பாஸ் சீசன் 3-ல் கலந்து கொண்டு மக்களுக்கு மிகப்பரிச்சயமான முகமாக மாறிய தர்ஷன் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் சரண்டர். அறிவழகன் உதவியாளர் கௌதமன் கணபதி இயக்கியிருக்கிறார். லால், சுஜித் சங்கர், பாடினி குமார் மற்றும் பலர் நடிக்க ஒரு கிரைம் திரில்லர் படமாக உருவாகியிருக்கிறது. தர்ஷனுக்கு நல்ல ஒரு வெற்றியை கொடுக்குமா? பார்க்கலாம்.
படத்தின் கதைப்படி, திருமழிசை காவல் நிலையத்தில் பயிற்சி எஸ்.ஐயாக சேர்ந்து 3 மாதங்களாக வேலை செய்து கொண்டிருக்கிறார் தர்ஷன். அவர் காவல் நிலையத்தில் எழுத்தராக பணி புரியும் லால் தேர்தல் சமயம் என்பதால் லைசென்ஸ் துப்பாக்கிகளை வாங்கி லாக்கரில் வைக்கும் பணியையும் கவனிக்கிறார். அப்படி மன்சூர் அலிகானின் லைசென்ஸ் துப்பாக்கியை வாங்கி வைக்கிறார், அது காணாமல் போகிறது. அதே நேரம் ரவுடியாக இருக்கும் சுஜித் ஷங்கர் சட்டமன்ற தொகுதிகளுக்கு பணத்தை பிரித்துக் கொடுக்கும் வேலையை அரசியல்வாதிகளுக்காக செய்து கொடுக்கிறார். அப்படி செய்யும்போது 10 கோடி ரூபாய் பணம் காணாமல் போகிறது. தேர்தல் வாக்குப்பதிவு முடிவதற்குள் துப்பாக்கியை போலீஸார் தேடுகிறார்கள். இன்னொரு பக்கம் சுஜித் சங்கர் டீம் சென்று அந்த 10 கோடியை தேடுகிறது. துப்பாக்கி எங்கே போனது? அந்த 10 கோடி பணம் என்ன ஆந்து? அதன் பின்னணியில் யார்? என்பதே மீதிக்கதை.
படத்தில் அறிமுக நடிகர்கள் முதல் மூத்த நடிகர்கள் வரை ஒவ்வொருவருடைய கதாபாத்திர தேர்வும், அந்த நடிகர்களின் நடிப்புமே படத்தின் ஆகப்பெரும் பலம். நடிகர்கள் அனைவரும் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள். ஹீரோ வரும் தர்ஷன் மிடுக்காக ஒரு துடிப்பான இளம் போலீஸ் அதிகாரியாக ஸ்கோர் செய்கிறார். லால் ஓய்வுக்காலத்தை நெருங்கும் ஒரு கான்ஸ்டபிளாக பலவித உணர்வுகளின் குவியலாய் படம் முழுக்க வந்து படத்தை இன்னும் உயர்த்துகிறார். சுஜித் ஷங்கர் மிரட்டல் வில்லனாக வந்து அதகளம் செய்கிறார். பாடி லாங்குவேஜ், நடிப்பு என பட்டைய கிளப்புகிறார். டப்பிங் குரல் மட்டும் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம். பாடினி குமார் இரண்டு காட்சிகளில் மட்டுமே வந்து போகிறார். அரோல் ஷங்கர், முனீஷ்காந்த், நடிகராகவே வரும் மன்சூர் அலிகான், ரம்யா என மற்ற நடிகர்களுமே நன்றாக நடித்திருக்கிறார்கள்.
மெய்யேந்திரன் ஒளிப்பதிவு திரில்லர் படத்துக்கேற்ற மூட் செட் செய்கிறது. இரவுக் காட்சிகள் அனைத்தும் மிக இயல்பாக இருக்கிறது. விகாஸ் இசையில் பின்னணி இசை படத்துக்கு பலம் சேர்க்கிறது.
கௌதமன் கணபதி அறிமுகப் படத்திலேயே அட்டகாசமான ஒரு திரில்லர் படத்தை கொடுத்திருக்கிறார். ஆரம்ப காட்சியில் இருந்து இறுதி வரை விறுவிறுப்பான ஒரு படத்தை தந்திருக்கிறார். நடிகர்களின் அழுத்தமான நடிப்பு, இசை ஒளிப்பதிவு என அனைத்தும் பக்கபலமாக அமைந்துள்ளது. முனீஷ்காந்த் ட்ராக் மட்டும் கொஞ்சம் இடைச்செருகலாக அமைந்த உனர்வை ஏற்படுத்துகிறது. சில தேவையில்லாத காட்சிகளை வெட்டி இருக்கலாம். நிச்சயம் ஒரு முறை பார்க்கும் படமாக அமைந்துள்ளது இந்த சரண்டர். தர்ஷனுக்கு