முன்னார் முதல்வர் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் ஆட்சியில் அமைச்சராகவும், தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராகவும் சிறந்து விளங்கிய மனிதர் ஆர்.எம்.வீரப்பன். எம்.ஜி.ஆர் அவர்களின் சத்யா மூவீஸ் நிறுவனத்தைத் திறம்பட நிர்வகித்து, எம்.ஜி.ஆர் தொடங்கி, ரஜினிகாந்த், கமல்ஹாசன், சத்யராஜ் என பல நட்சத்திரங்களுடன், தமிழ்த் திரையுலகிற்கு பல்வேறு வெற்றிப் படங்களைத் தந்து, சிறந்த தயாரிப்பாளராக, அவர் தலைமையில் பல ஆச்சரியங்களை நிகழ்த்திக் காட்டியது சத்யா மூவிஸ்.
அரசியல், திரைத்துறை, தமிழ்த்துறை என அனைத்துத் துறைகளிலும் சாதனை படைத்தவர் திரு.ஆர்.எம்.வீரப்பன் அவர்கள இன்று சென்னையில் காலமானார். அவருக்கு வயது 98. அவர் மரணமடைந்த செய்தி கேட்டதும் முதல்வர் ஸ்டாலின், நடிகர் ரஜினிகாந்த் உட்பட பல்வேறு அரசியல் கட்சியினர், திரைத்துறையினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.