மக்களின் இதயங்களில் நீங்காத இடம் பிடித்துள்ள நடிகை சிம்ரன், திரையுலகில் 28 ஆண்டுகளை வெற்றிகரமாக கொண்டாடும் வேளையில், நாடு முழுவதுமுள்ள தனது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் விதத்தில் ஒரு திரைப்படத்தில் நடிக்கிறார். ஃபோர் டீ மோஷன் பிக்சர்ஸ் பேனரில் தீபக் பஹா தயாரித்து, சுயாதீன திரைப்படங்களுக்காக புகழ் பெற்ற லோகேஷ் குமார் இயக்கத்தில் வளர்ந்து வரும் ‘தி லாஸ்ட் ஒன்’, திகில் மற்றும் ஃபேன்டசி திரைப்படமாக உருவாகிறது. இதுவரை கண்டிராத வேடத்தில் சிம்ரன் இதில் தோன்றுகிறார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் பான்-இந்திய படமாக ‘தி லாஸ்ட் ஒன்’ உருவாகிறது. சவாலான மற்றும் அற்புதமான பாத்திரத்தை சிம்ரன் இதில் ஏற்றுக்கொண்டிருப்பதால் ரசிகர்களின் மனங்களில் நிலையான இடத்தை இப்படம் பிடிக்கும் என படக்குழுவினர் தெரிவிக்கின்றனர்.
ஏறக்குறைய மூன்று தசாப்த கால அனுபவத்தில், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி படங்களில் தனது நடிப்பால் பார்வையாளர்களை கவர்ந்துள்ள சிம்ரன், இந்திய சினிமாவில் மிகவும் விரும்பப்படும் நடிகைகளில் ஒருவராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளார். இந்த அசாத்தியமான பயணத்திற்கு மேலும் புகழ் சேர்க்கும் வகையில் ‘தி லாஸ்ட் ஒன்’ திரைப்படத்தில் அவர் நடிக்கிறார்.
சமீபத்தில் இவர் நடித்த ‘குல்மோஹர்’, ‘ராக்கெட்ரி’ ஆகிய படங்கள் விமர்சன ரீதியாக பாராட்டு பெற்றதோடு மதிப்புமிக்க தேசிய விருதுகளையும் வென்றன. இந்த இரண்டு படங்களிலும் சிம்ரனின் நடிப்பு பெரும் வரவேற்பை பெற்றது. தமிழில் அவரது சமீபத்திய படமான ‘அந்தகன்’ ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. வலுவான கதாபாத்திரத்தில் சிம்ரனின் நடிப்பு பேசப்பட்டடது. இவ்வாறு மாறுபட்ட மற்றும் சக்திவாய்ந்த பாத்திரங்களைத் தேர்ந்தெடுக்கும் சிம்ரனின் மகுடத்தில் மேலும் ஒரு வைரமாக ‘தி லாஸ்ட் ஒன்’ திகழும்.
தற்போது தயாரிப்பில் உள்ள ‘தி லாஸ்ட் ஒன்’ ஏற்கனவே எதிர்பார்ப்புகளை உருவாக்கி உள்ளது. நடிகர்கள் மற்றும் குழுவினர் பற்றிய கூடுதல் விவரங்கள் விரைவில் வெளியிடப்படும். சிம்ரனின் திரையுலக பயணத்தில் ஒரு மைல்கல் படமாக ‘தி லாஸ்ட் ஒன்’ இருக்கும்.
தனது அற்புதமான சினிமா பயணத்தில் புதிய அத்தியாயத்தில் சிம்ரன் அடியெடுத்து வைக்கும் இந்த தருணத்தில், ஃபோர் டீ மோஷன் பிக்சர்ஸ் பேனரில் தீபக் பஹா தயாரித்து லோகேஷ் குமார் இயக்கும் ‘தி லாஸ்ட் ஒன்’ திரைப்படம் ரசிகர்களுக்கு புதியதொரு திரை அனுபவத்தை வழங்கும்.