சரிகமா ஒரிஜினல்ஸின் ‘ச்சீ ப்பா தூ…’ வீடியோ இசை ஆல்பம் வெளியீடு!

சுயாதீன இசை ஆல்பங்களில் அடுத்தடுத்து பல அற்புதமான ஆல்பங்களை வழங்கி வரும் சரிகமா நிறுவனத்தின் அடுத்த வெளியீடாக, இசையமைப்பாளர் தரண் குமார் இசையில், பிரபல ராப் இசை கலைஞரான வாஹீசன் ராசய்யா எழுதியுள்ள ‘ச்சீ ப்பா தூ…’ வீடியோ பாடல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் திரை இசையைக் கடந்து தற்போது ரசிகர்கள் மத்தியில் இன்டிபென்டன்ட் இசைக்கான வரவேற்பு பெருகி வருகிறது. தமிழின் முன்னணி இளம் இசையமைப்பாளர்களில் ஒருவரான தரண்குமார், பல புதுமையான இன்டிபென்டன்ட் இசை ஆல்பங்களை உருவாக்கி வருகிறார். அவரின் அடுத்த வெளியீடாக சரிகமா ஒரிஜினல்ஸின் ‘ச்சீ ப்பா தூ…’ வீடியோ பாடல் வெளியாகி வரவேற்பைக் குவித்து வருகிறது.

இலங்கையில் மிகவும் பிரபலமான ராப் பாடகரும் இன்டிபென்டன்ட் இசை கலைஞருமான வாஹீசன் ராசய்யாயின் திறமையால் ஈர்க்கப்பட்ட தரண் குமார், இந்த புதிய ஆல்பம் பாடலில் அவருக்கு வாய்ப்பளித்து, அவருடன் இணைந்து இப்பாடலை உருவாக்கியுள்ளார். ‘ச்சீ ப்பா தூ…’ பாடலை எழுதியிருப்பதோடு அதில் ராப் வடிவத்தையும் அமைத்துள்ளார் வாஹீசன் ராசய்யா.

இப்பாடலை முன்னணி இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் மற்றும் வாஹீசன் ராசய்யா ஆகியோர் இணைந்து பாடியிருக்கிறார்கள். இந்த பாடலுக்கு சக்திவேல் நடன அமைப்பை செய்துள்ளார், மாஸ்டர் ராஜூ சுந்தரம் நடனமாடியிருக்கிறார். இந்த வீடியோ இசை ஆல்பத்தை இயக்குநர் அனந்து இயக்கியிருக்கிறார்.

தரண் குமரின் அற்புதமான இசை, பாடலைக் கேட்டவுடன் ஈர்க்கும் வரிகள், இடையில் வரும் அசத்தலான ராப் என இந்த தலைமுறை ரசிக்கும் வகையிலான இசையில் அசத்தும் இப்பாடலை, இசை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *