தமிழ் சினிமாவை புரட்டிப் போட்ட ஜெயிலர் படத்தின் அபார வெற்றிக்கு பின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார். ஜெய்பீம் படத்தை இயக்கிய ஞானவேல் இந்த படத்தை இயக்கி வருகிறார். இன்னும் ஒரு சில நாட்கள் படப்பிடிப்பு மட்டுமே மீதமுள்ளது.
இதனையடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் பிரமாண்ட படத்தில் நடிக்கிறார் ரஜினி. தலைவர் 171 என தற்காலிகமாக அழைக்கப்படும் இந்த படத்தின் டைட்டில் அறிவிப்பு டீசர் வரும் ஏப்ரல் 22ஆம் தேதி வெளியாக இருக்கிறது. அதற்கான படப்பிடிப்பு ஏப்ரல் 8 மற்றும் 9ஆம் தேதிகளில் சென்னையில் நடைபெற இருக்கிறது. படத்தின் பூஜை மற்றும் படப்பிடிப்பு ஜூன் மாதம் துவங்க இருக்கிறது.
இந்த நிலையில் படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் குறித்து தகவல்கள் கசிந்து வருகின்றன. ஜெயிலர், விக்ரம், லியோ போன்ற படங்களை போலவே இந்த படமும் பல்வேறு நட்சத்திரங்கள் நடிக்க பிரமாண்டமாக உருவாக இருக்கிறது. தற்போது முன்னணி இந்தி நடிகர் ரன்வீர் சிங்கை ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க லோகேஷ் அணுகியிருக்கிறார். அவரும் ரஜினி, லோகேஷ் படம் எனபதால் உடனடியாக சம்மதம் தெரிவித்து விட்டார். மே மாதம் இறுதி அல்லது ஜூன் மாதம் ரன்வீர் சிங் மற்றும் இதர நட்சத்திரங்கள் யார் யார் என்பது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்.