ஆக்சன் அவதாரத்தில் நயன்தாரா கலக்கும் “ராக்காயி” படத்தின் டைட்டில் லுக் டீசர்!

Drumsticks Productions தயாரிப்பில், லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடிப்பில், அறிமுக இயக்குநர் செந்தில் நல்லசாமி இயக்கத்தில், அதிரடி ஆக்சன் டிராமாவாக உருவாகவுள்ள “ராக்காயி” படத்தின் டைட்டில் லுக் டீசர், நயன்தாரா பிறந்த நாளை கொண்டாடும் விதமாக வெளியிடப்பட்டுள்ளது. Drumsticks Productions மற்றும் Movie Verse Studios நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றனர்.

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடிப்பில் உருவாகும் இப்படம் உருவாகிறது. இதுவரை பார்த்திராத அதிரடி ஆக்சன் அவதாரத்தில், இப்படத்தில் நயன்தாரா தோன்றவுள்ளார். அவரது பிறந்தா நாளில் ரசிகர்களை மகிழ்விக்கும் விதமாக, “ராக்காயி” படத்தின் அட்டகாசமான டைட்டில் டீசரை தயாரிப்பாளர்கள் இன்று வெளியிட்டுள்ளனர். இந்த டீசர் தற்போது இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. புதுமையான கதைக்களத்தில், பரபரப்பான திரைக்கதையுடன், ப்ரீயட் ஆக்சன் டிரமாவாக உருவாகவுள்ள இப்படத்தை, அறிமுக இயக்குநர் செந்தில் நல்லசாமி இயக்கவுள்ளார்.

பிரபல இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா இப்படத்திற்கு இசையமைக்கிறார். கௌதம் ராஜேந்திரன் ஒளிப்பதிவு செய்ய, பிரவீன் ஆண்டனி எடிட்டராக பணியாற்றவுள்ளார். இப்படத்தில் நடிக்கவுள்ள மற்ற நடிகர், நடிகையர் பற்றிய விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

இப்படத்தை பெரும் பொருட்செலவில் Drumsticks Productions நிறுவனம் மற்றும் Movie Verse Studios இணைந்து தயாரிக்கின்றனர். இப்படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் துவங்கி பரபரப்பாக நடந்து வருகிறது. Movie Verse நிறுவனம் இணைந்து வழங்குகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *