சென்னை YMCA மைதானத்தில் அக்டோபர் 4 ஹாரிஸ் ஜெயராஜ் இசை நிகழ்ச்சி!

இந்தியாவின் முன்னணி ஊடகத் தயாரிப்பு மற்றும் திறமை மேலாண்மை நிறுவனமான நாய்ஸ் அண்டு கிரைன்ஸ் (Noise and Grains), திரைத்துறை ஜாம்பவான்கள் கலந்து கொள்ளும் பிரம்மாண்ட கலை நிகழ்ச்சிகளை வெற்றிகரமாக தயாரித்து, உருவாக்கி, நடத்துவதன் மூலம் இந்திய ஊடக வெளியில் தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது.

ரசிகர்களின் பேராதரவு பெற்று சாதனை படைத்த ‘யுவன் 360’, ‘சோனு நிகம் லைவ்’, ‘விஜய் ஆண்டனி 3.0’, ‘டைம்லெஸ் மெலோடிஸ் ஆஃப் எ லைஃப்டைம்: கே.எஸ். சித்ரா லைவ் இன் கான்செர்ட்’, உள்ளிட்ட மாபெரும் வெற்றி பெற்ற நிகழ்ச்சிகளை தொடர்ந்து,

தென்னிந்திய திரையுலகின் முன்னணி இசையமைப்பாளரான ஹாரிஸ் ஜெயராஜ் கலந்து கொள்ளும் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சியை சாஸ்தா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து நாய்ஸ் அண்டு கிரைன்ஸ் ஏற்பாடு செய்யவுள்ளது.

‘ராக் ஆன் ஹாரிஸ் 3.0’ என பெயரிடப்பட்டுள்ள இந்த நிகழ்ச்சி சென்னை ஒய் எம் சி ஏ மைதானத்தில் அக்டோபர் 4 சனிக்கிழமை மாலை ரசிகர்கள் முன்னிலையில் நடைபெறுகிறது, இதற்கான நுழைவுச் சீட்டுகள் டிஸ்டிரிக்ட் பை சொமாட்டோ இணையதளம் மற்றும் செயலியில் கிடைக்கும்.

இசை ரசிகர்களின் இதயத்துடிப்பை புரிந்து அதற்கேற்ப நிகழ்ச்சிகளை சிறப்பாக திட்டமிட்டு அரங்கேற்றி வரும் நாய்ஸ் அண்டு கிரைன்ஸ் நிறுவனத்தினர், முன்னணி இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் சென்னையில் பங்கு பெறும் இசை நிகழ்ச்சியை சாஸ்தா புரொடக்ஷன்ஸ் உடன் இணைந்து நடத்துவது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

நிகழ்ச்சி குறித்து பேசிய ஹாரிஸ் ஜெயராஜ், “ரசிகர்கள் முன் இசைப்பது என்பது ஒரு தனி மகிழ்ச்சி. அதுவும் தாய் மண்ணான சென்னை ரசிகர்கள் முன் இசை நிகழ்ச்சியை வழங்குவது மறக்க முடியாத அனுபவம். நாய்ஸ் அண்டு கிரைன்ஸ் மற்றும் சாஸ்தா புரொடக்ஷன்ஸ் உடன் இணைந்து ரசிகர்களை சந்திப்பது மிகுந்த சந்தோஷத்தை அளிக்கிறது” என்றார்.

‘ராக் ஆன் ஹாரிஸ் 3.0’ நிகழ்ச்சியில் ஹாரிஸ் ஜெயராஜ் உடன் இணைந்து ரசிகர்களின் இதயம் கவர்ந்த‌ பாடகர்கள் மற்றும் இசைக் கலைஞர்கள் பங்கேற்று காலத்தால் அழிக்க முடியாத பாடல்களை ரசிகர்களுக்காக மேடையில் வழங்குவார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *