2வது தென்மண்டல டென்பின் பவுலிங் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற மகிபால் சிங், சுமதி!

2 வது தென்மண்டல டென்பின் பவுலிங் போட்டி, ஐதராபாத்தில் உள்ள கேம் எக்ஸ்ட்ரீம் பவுலிங் சென்டரில் நடைபெற்றது. தெலுங்கானா டென்பின் பவுலிங் அசோசியேஷன்ஸ் நடத்திய இத்தொடரில் தென்னிந்தியாவை சேர்ந்த முன்னணி டென்பின் பவுலிங் வீரர் மற்றும் வீராங்கனைகள் பங்கு பெற்றனர்.

ஆண்கள் பிரிவின் இறுதிப் போட்டியில் இரண்டு போட்டிகளில் மொத்த பின்ஃபால் அடிப்படையில், முதலிடம் பெற்ற தமிழக வீரர் மகிபால் சிங் தனது சக தமிழக 7வது நிலை வீரர் கணேஷ்.என்.டி-யுடன் மோதினார். இந்த போட்டியில் மகிபால் சிங், 52 பின்கள் வித்தியாசத்தில் (405-353) கணேஷை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.

முன்னதாக நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் கணேஷ்.என்.டி (387) தெலங்கானாவின் லலித்குமார்.ஜி (347) மற்றும் கர்நாடகாவின் 2வது நிலை வீரர் கிஷன்.ஆர் (323) ஆகியோரை எளிதில் வென்றார்.

பெண்கள் பிரிவு இறுதிப் போட்டியில் தற்போதைய தேசிய சாம்பியன் ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த சுமதி நள்ளபண்டு, கர்நாடகாவின் ஹிதாஷா சிசோடியா மற்றும் தமிழ்நாட்டின் சபீனாஅதீக்காவை 3 பின்களின் வித்தியாசத்தில் (298 – 295 – 280) வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.

இந்த தொடரில், ஆந்திரப்பிரதேசம், கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு மற்றும் தெலங்கானா ஆகிய மாநிலங்களை சேர்ந்த 94 வீரர், வீராங்கனைகள் (82 ஆண்கள் மற்றும் 12 பெண்கள்) பங்கேற்றனர்.

பயோஃபோர் இந்தியா பார்மாசுடிக்கல் ஸ்பை. லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் டாக்டர் ஜகதீஷ் பாபுரங்கி செட்டி பரிசுகள் மற்றும் கோப்பைகளை வெற்றியாளர்களுக்கு வழங்கி கௌரவித்தார்.

சிறப்புபரிசுகள்:

* 6 ஆட்டங்களில்அதிகபட்சபின்ஃபால் (ஆண்கள்பிரிவு): கிஷன்ஆர் (கர்நாடகா) — 1220

* 18 ஆட்டங்களில்அதிகபட்சபின்ஃபால் (ஆண்கள்பிரிவு): மகிபால்சிங் (தமிழ்நாடு) — 3586

* 12 ஆட்டங்களில்அதிகபட்சபின்ஃபால் (பெண்கள்பிரிவு): சுமதிந (ஆந்திரப்பிரதேசம்) — 2124

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *