சிவகார்த்திகேயன், AR முருகதாஸ் கூட்டணியில் மிக பிரமாண்டமாக உருவாகியிருக்கும் திரைப்படம் மதராஸி. படத்தின் சாதக, பாதகங்களை அலசும் முன்னோட்ட கட்டுரை.
STRENGTHS (நேர்மறையான அம்சங்கள்):
1. சிவகார்த்திகேயன் & ARM காம்போ: இந்தக் கூட்டணி மிகப்பெரிய பலம். ஆரம்ப கால படங்களில் காமெடியை மையப்படுத்திய கதைகளில் கலக்கிய சிவகார்த்திகேயன் படிப்படியாக ஹீரோவாக உயர்ந்து அமரன் படத்தின் மூலம் ஆக்ஷன் ஹீரோவாகவும் தன்னை நிலைநிறுத்தியுள்ளார். மான் கராத்தே இசை வெளியீட்டு விழாவில் நான் எல்லாம் ஷங்கர், முருகதாஸ் மாதிரியான பெரிய இயக்குநர்களுடன் பணியாற்றக் கூடாதா? என கேட்டார். அதை இன்று சாத்தியப்படுத்தியும் காட்டியுள்ளார். AR முருகதாஸ் சூர்யாவுக்கு ஒரு கஜினி, விஜய்க்கு ஒரு துப்பாக்கி கொடுத்த மாதிரி சிவகார்த்திகேயனுக்கு இந்தப் படத்தை தருவார் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
2. ஆக்ஷன் ஹீரோவாக மாற்றம்: மாவீரன், அமரன் படங்களில் சிவகார்த்திகேயனின் ஆக்ஷன் அவதாரம் மக்களால் வரவேற்கப்பட்டது. துப்பாக்கி படம் விஜய்க்கு ஒரு மாஸ் மேக்-ஓவர் கொடுத்த மாதிரி, இந்தப் படம் சிவகார்த்திகேயனை அடுத்த கட்டத்துக்கு உயர்த்தும் படமாக இருக்கும்.
3. பட்ஜெட் & பிரமாண்டம்: சிவகார்த்திகேயனின் கேரியரில் இதுவரை இல்லாத அளவு பிரமாண்ட பட்ஜெட். டிரெய்லர் பார்க்கும்போதே அந்த பிரமாண்டம் தெரிகிறது. படம் வெற்றி பெற்றால் அமரன் போல பாக்ஸ் ஆபீஸில் பெரிய வசூலை அள்ளலாம்.
4. விஷுவல்ஸ் & ஆக்ஷன்: டிரெய்லரில் விஷுவல்ஸ் தரமாக உள்ளது. ஆக்ஷன், துப்பாக்கி சண்டைகள், வெட்டு, குத்து, வெடிகுண்டு காட்சிகள் எல்லாம் நல்ல ஒரு ஆக்ஷன் பட உணர்வைத் தருகிறது. பல இரவுக் காட்சிகள் இருப்பதும் ஒரு நல்ல விஷுவல் ட்ரீட்டாக இருக்கும்.
5. தேசபக்தி உணர்வு: அமரன், துப்பாக்கி மாதிரி இந்தப் படமும் தேசபக்தி உணர்வைத் தரும் என நம்பப்படுகிறது. AR முருகதாஸ் இந்த படம் கஜினி + துப்பாக்கி கலவையாக இருக்கும் எனக் கூறியிருப்பது எதிர்பார்ப்பை மேலும் ஏற்றியுள்ளது. எமோஷன் காட்சிகள் ஒர்க் ஆனால் இது சிவகார்த்திகேயனுக்கு மற்றொரு மெகா பிளாக்பஸ்டர் ஆகலாம்.
6. பிரமோஷன்ஸ்: சென்னையில் பிரமாண்ட ஆடியோ லாஞ்ச், ஹைதராபாத், மும்பை, பெங்களூர், கொச்சி என பல ஊர்களில் புரமோஷன் சிறப்பாக நடந்துள்ளது. புக்கிங் ஓப்பன் ஆன இடங்களில் எல்லாம் ஸ்டெடியாக செல்கிறது.
7. அனிருத் இசை: சலம்பல, வழியுறேன் பாடல்கள் ஏற்கனவே ஹிட்டு. அனிருத் BGM வழக்கம் போல சூப்பராக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை. இது படத்துக்கு பெரிய பலம்.
8. நாயகி ருக்மிணி வசந்த்: சிவகார்த்திகேயன்-ருக்மிணி ஜோடி ரொம்பவே ஃப்ரெஷ்ஷாக உள்ளது. இந்த ஜோடியின் காதல் காட்சிகளை இளைஞர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். ருக்மிணியின் கதாபாத்திரம் படத்தை தூக்கி நிறுத்தும்.
WEAKNESS (பலவீனங்கள்):
1. படத்தின் நீளம்: 2 மணி 47 நிமிடங்கள், கிட்டத்தட்ட அமரன் படத்தின் நீளம். டைட்டான திரைக்கதை இல்லையென்றால் மெதுவாகவோ, லேக் ஆகவோ உணரப்படலாம். இந்த நீளத்திற்கு AR முருகதாஸ் நியாயம் செய்ய வேண்டும்.
2. ஹைப் குறைவு: பொதுவாகவே இந்த படத்துக்கு எதிர்பார்ப்பு குறைவாகவே உள்ளது. இது ஒரு பாஸிடிவான அம்சம் தான் என்றாலும் புக்கிங் சாதாரணமாகவே செல்கிறது. வாய்மொழி விமர்சனத்தை (Word of Mouth) நம்பியே மதராஸி டீம் உள்ளது. இது ஒரு பெரிய பலவீனம்.
3. அமரன் ஒப்பீடு: அமரன் சிவகார்த்திகேயனுக்கு மிகப்பெரிய பெஞ்ச்மார்க் படமாக அமைந்து விட்டது. அதனால் இந்தப் படத்தையும் அதனுடன் ஒப்பிடுவார்கள். அமரன் வசூலில் 60-70% வந்தாலும் சிவகார்த்திகேயனின் மார்க்கெட் மேலும் உயரும். ஆனால், தோல்வியடைந்தால் அமரன் வெற்றி ஒரு Fluke வெற்றி என்று பேசப்படும் அபாயம் உண்டு. இது சிவகார்த்திகேயனின் Stardom-க்கு பாதிப்பாக இருக்கும்.
OPPURTUNITIES வாய்ப்புகள்:
1. செப்டம்பர் 5 விடுமுறை: முதல் நாள் பெரிய ஓப்பனிங் கிடைக்க வாய்ப்பு உள்ளது. அமரன் தீபாவளி தினத்தன்று வெளியாகி சிவகார்த்திகேயனின் சமகால ஹீரோக்கள் படங்களில் டாப்பில் உள்ளது. அதை மேட்ச் செய்தாலே சிவகார்த்திகேயனின் ரேஞ்ச் மேலும் உயரும்.
2. சூப்பர் விமர்சனங்கள்: 100% நேர்மறையான விமர்சனங்கள் வந்தால், அமரன் வசூலை மேட்ச் செய்ய வாய்ப்பு உள்ளது. அப்படி நடந்தால், ரஜினி, விஜய்க்கு அடுத்து அதிக 300 கோடி படங்களை கொண்ட ஹீரோக்களில் சிவகார்த்திகேயனும் இடம்பெறுவார்.
THREATS (அச்சுறுத்தல்கள்):
1. போட்டி படங்கள்: செப்டம்பர் 5ஆம் தேதியே 3 படங்கள் ரிலீஸ் ஆகின்றன. அடுத்தடுத்த வாரங்களில் தெலுங்கு படங்கள் உட்பட பல படங்கள் வருகின்றன. எனவே, நல்ல விமர்சனங்கள் கண்டிப்பாக தேவை.
2. போட்டி ரசிகர்களின் எதிர்ப்பு: Tier-2 ஹீரோக்களின் ரசிகர்கள் மற்றும் விஜய் ரசிகர்களில் ஒரு பிரிவினர் சிவகார்த்திகேயனை வீழ்த்தும் முனைப்பில் உள்ளனர். அவர்கள் எதிர்மறை விமர்சனங்களைப் பரப்பக் காத்திருக்கின்றனர். எனவே படம் மிகச்சிறப்பாக அமைந்து வெற்றி பெற வேண்டும்.
மொத்தத்தில் மதராஸி சிவகார்த்திகேயனின் கேரியரில் ஒரு முக்கியமான படமாக அமைய வாய்ப்பு உள்ளது. AR முருகதாஸின் இயக்கம், ஆக்ஷன், விஷுவல்ஸ், அனிருத் இசை, தேசபக்தி உணர்வு ஆகியவை படத்தை உயர்த்தும். ஆனால், நீளமான ரன்னிங் டைம், குறைவான ஹைப், அமரன் ஒப்பீடு ஆகியவை சவால்கள். செப்டம்பர் 5 விடுமுறை மற்றும் நல்ல விமர்சனங்கள் படத்தை மெகா ஹிட்டாக மாற்றலாம். மழை மற்றும் போட்டி படங்கள் சிறிய அச்சுறுத்தலாக உள்ளன. சவால்களை தாண்டி மதராஸி வெற்றி எப்படிப்பட்டதாக அமையும் என்பதை பார்க்கலாம்.