ஜூன் 20 வெளியாகும் டிஸ்னி பிக்சார் புதிய விஷுவல் ஸ்பெக்டக்கிள் “எலியோ”!

இன்சைட் அவுட் 2 மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து, டிஸ்னி மற்றும் பிக்சார் இணைந்து மற்றுமொரு கனவுபோன்ற அதிரடியான திரைப்படத்தை வழங்க உள்ளன – “எலியோ”! இந்த இன்டர்கலக்ஸி அத்தியாயம் வரும் ஜூன் 20, 2025 அன்று ஆங்கிலம், தமிழ், ஹிந்தி மற்றும் தெலுங்கு மொழிகளில் உலகமெங்கும் வெளியாகிறது.

இன்க்ரெடிபிள்ஸ், டாய் ஸ்டோரி, ஃபைண்டிங் நீமோ, இன்சைட் அவுட் போன்ற கனவுகளை ரசிகர்களுக்கு வழங்கிய புகழ்பெற்ற ஸ்டூடியோ, இப்போது நம்மை விண்வெளிக்கு அப்பால் அழைத்துச் செல்லும் புதிய அனுபவத்தை வழங்குகிறது.

எலியோ – விண்வெளியை பற்றிய ஆசையுடன் வாழும் ஒரு சிறுவன், எதிர்பாராத விதமாக அண்டாரங்கள் முழுவதும் பயணம் செய்யும் புது அவதாரத்தில், பூமியின் தூதராக பரிசீலிக்கப்படுகிறான்! வித்தியாசமான கிரகங்கள், வினோதமான உயிரினங்கள் மற்றும் பிரபஞ்சத்தை பாதிக்கும் ஒரு பெரும் சிக்கலை சந்திக்கிறான் எலியோ. இந்த பயணத்தில், தனக்கென இருக்கும் இடத்தை உணர்வதும், உண்மையிலேயே யார் என்பதை கண்டுபிடிப்பதும் தான் கதையின் மையம்.

இத்திரைப்படத்தை இயக்கியவர்கள்:
மடலின் ஷரஃபியன் (Burrow),
டோமீ ஷீ (Turning Red, Bao),
ஏட்ரியன் மோலினா (Coco).

வாய்ஸ் காஸ்ட்:

யோனாஸ் கிப்ரீயாப் – எலியோ

சோயி சால்தானா – ஆன்ட் ஒல்கா

ரெமி எட்ஜர்லி – கிளோர்டன்

பிராட் காரெட் – லார்ட் கிரிகான்

ஜமீலா ஜமீல் – தூதர் குவெஸ்டா

ஷர்லி ஹென்டர்சன் – OOOOO

டிஸ்னி பிக்சார் வழங்கும் “எலியோ” – ஜூன் 20, 2025 முதல் தமிழ், ஆங்கிலம், ஹிந்தி மற்றும் தெலுங்கு மொழிகளில் உங்கள் அருகிலுள்ள திரையரங்குகளில்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *