ஜெயிலர் படத்தின் மெகா வெற்றிக்கு பின் லைகா ப்ரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ஜெய்பீம் இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார். அனிருத் இசையமைக்கும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் ஒரு சில நாட்கள் படப்பிடிப்பு மட்டுமே மீதமுள்ளது. இந்நிலையில் வேட்டையன் ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஒரு அதிரடி போஸ்டர் மூலமாக லைகா நிறுவனம் வெளியிட்டுள்ளது.
அதில் கூலிங் கிளாஸ் அணிந்து மிக இளமையாக தோன்றும் சூப்பர் ஸ்டார் கையில் துப்பாக்கியுடன் ஸ்டைலாக இருக்கிறார். அதில் அக்டோபர் மாதம் வெளியீடு என்று மட்டுமே அறிவித்திருக்கிறார்கள், தேதி குறிப்பிடப்படவில்லை. அக்டோபரில் ஆயுத பூஜை மற்றும் தீபாவளி என இரண்டு பண்டிகைகள் வருகின்றன. அதில் எந்த தேதியில் படத்தை வெளியிடுவார்கள் என இப்போதே ரசிகர்கள் ஆர்வத்துடன் விவாதித்து வருகிறார்கள்.