V R COMBINES விமலா ராஜநாயகம் தயாரிக்கும் மூன்றாவது படம் வஞ்சி. கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கியுள்ளார் ராஜேஷ் சிஆர். கேமராமேன் பின்சீர், மியூசிக் டைரக்டர் சஜித் சங்கர். எடிட்டர் ஜெயகிருஷ்ணன். ராஜேஷ் ஹீரோயின் நயீரா நிகார். மற்றும் பலர் நடிக்கிறார்கள். முக்கிய கதாபாத்திரத்தில் குங்ஃபூ இந்திய தலைமை பயிற்சியாளரான மாஸ்டர் ராஜநாயகம் நடிக்கிறார். இவர் நட்டி நடராஜன் நடிப்பில் சமீபத்தில் வெளியான சீசா படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியுள்ளார். மேலும் சில முன்னணி நடிகர்களுடன் நடித்தும் வருகிறார்.
இந்த கதையை பற்றி இயக்குனர் கூறும்போது, “இது தமிழ்நாடு, கேரளா மலைப் பகுதிகளில் ஏலக்காய் தோட்டத்தில் வேலை பார்க்கும் தமிழ் மக்களின் கதை. அவர்களின் வாழ்வாதாரம், அங்கு வேலை பார்க்கும் மக்களின் வலி, தினந்தோறும் வன விலங்குகளால் கூலி தொழிலாளர்களுக்கு ஏற்படுகின்ற மிகவும் மோசமான உயிர் பலிகள், அதற்கு அரசு செய்கின்ற பாதுகாப்பு என்ன என்பதை பற்றிய வாழ்வியல் படமாக வஞ்சி. இதில் வாழ்கின்ற் ஒரு பெண்ணின் வாழ்க்கை தான் கதை. கோழையாக வாழ்வது பெண்ணல்ல, வீரமாக வாழ்ந்து காட்டுவதே பெண்களின் வாழ்க்கையாக இருக்க வேண்டும் என்று உண்மையாகவும் மன தைரியத்தோடு மலைக்காட்டுப் பகுதிகளில் அங்கு வாழ்கிற மக்களோடு ஒரு பெண்ணாக வாழ்ந்து நடித்து மிரட்டிருக்கிறார் ஹீரோயின் நயீரா நிகார். எல்லோருக்கும் ஒரு பாடமாக இந்த படம் அமைய வேண்டும். படத்தின் பாடல்கள் மண் வாசனை கொண்டு மக்களின் மனதில் இடம் பிடிக்கிற வண்ணமாக இந்த பாடல்கள் இருக்கும்” என்றார்.
இறுதிகட்ட படப்பிடிப்பு தற்போது நடந்து கொண்டிருக்கிறது. விரைவில் திரைக்கு வர தயாராக இருக்கிறது வஞ்சி.