நடிகர் தனுஷ், நாகர்ஜூனா, ராஷ்மிகா மந்தனா நடிப்பில் தெலுங்கின் தனித்துவமான இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் “குபேரா”. தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் தயாராகி, தமிழ், தெலுங்கு, இந்தி என மும்மொழிகளில் நாளை வெளியாகிறது. இரண்டு வாரங்களுக்கு முன்பு தணிக்கை செய்யப்பட்ட இந்த படம் 3 மணி நேரம் 15 நிமிடம் கொண்டதாக தகவல்கள் வந்தன. 3:15 மணி நேரம் என்பது உண்மை தான், ஆனால் கடைசி நேர பரபரப்பை தவிர்க்க முன்பே தணிக்கை செய்து விட்டோம், இறுதி பதிப்பில் 20 நிமிடங்களை குறைத்து வெளியிடுவோம் என தயாரிப்பாளரும் தெளிவுபடுத்தியிருந்தார்.
தற்போது குபேரா படத்தின் தமிழ் தணிக்கை முடிந்திருக்கிறது. தயாரிப்பாளர் சொன்னது போலவே கிட்டத்தட்ட 13 நிமிடங்கள் குறைத்து 3 மணி நேரம் 2 நிமிடங்கள் ஓடக் கூடிய படமாக இருக்கிறது.
ஒரு மிகச்சிறந்த திரை அனுபவத்தை தரவும், மிகப்பெரிய கதைக்களத்தையும் திரையில் சொல்லவும் இந்த கால அளவு அவசியம் என்பது புரிகிறது. ட்ரைலரிலேயே தனுஷூக்கு தேசிய விருது நிச்சயம் என்பது போன்ற ஒரு எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கிறது. நிச்சயம் ஒரு பெரிய வெற்றியை பெறும் என்பதையும் உறுதியாக சொல்லலாம்.