கேடி – தி டெவில் படத்தின் “சிவ சிவா” பாடல் ரிலீஸ்!

KVN Productions நிறுவனம், தொலைநோக்கு படைப்பாளி பிரேம் இயக்கத்தில், மிகவும் எதிர்பார்க்கப்படும் பான்-இந்தியா திரைப்படம் கேடி – தி டெவில் படத்திலிருந்து, “சிவ சிவா” என்ற கன்னட நாட்டுப்புற கீதத்தைப் பெருமையுடன் வெளியிட்டுள்ளது. மனதை வசீகரிக்கும் இந்தப் பாடல், கன்னட நாட்டுப்புற இசையின் துடிப்பான சாரத்தை, பாரம்பரியத்தை, கொண்டாடுகிறது. இப்பாடலைப் புகழ்பெற்ற இசையமைப்பாளர் அர்ஜுன் ஜன்யாவால் இசையமைத்துள்ளார் மற்றும் ஒளிப்பதிவாளர் வில்லியம் டேவிட், காட்சிக்கு உயிரூட்டியுள்ளார். இந்தப் பாடல் இந்திய நாட்டுப்புற இசையின் கலாச்சார ஆழத்தையும் கலையின் ஆழத்தையும் எடுத்துக் காட்டுகிறது.

முன்னணி பாடகர்கள் கைலாஷ் கெர் மற்றும் பிரேம் (கன்னடம்), விஜய் பிரகாஷ் (தமிழ் மற்றும் தெலுங்கு), பிரணவம் ஷஷி (மலையாளம்), மற்றும் சலீம் மாஸ்டர் (இந்தி)- ஆகியோர் பாடியுள்ளனர். ஒவ்வொரு பதிப்பும் பாடலின் ஆத்மார்த்தமான மையத்தை, அதன் மொழியியல் சாரத்தோடு பிரதிபலிக்கிறது. முன்னணி பாடலாசிரியர்கள் மஞ்சுநாத் பி.எஸ் (கன்னடம்), மதன் கார்க்கி (தமிழ்) சந்திர போஸ் (தெலுங்கு), ரகீப் ஆலம் (இந்தி), மற்றும் மான்கொம்பு கோபாலகிருஷ்ணன் (மலையாளம்), ஒவ்வொரு மொழிக்கும் தனித்துவமான பாடல் வரிகளைத் தந்துள்ளனர். ஆனந்த் ஆடியோ லேபிள் இப்பாடலை வெளியிட்டுள்ளது.

“சிவ சிவா” என்பது வளமான கலாச்சார பன்முகத்தன்மை மற்றும் நாட்டுப்புற இசையின் உலகளாவிய ஈர்ப்பைத் தரும் அற்புதமான பாடலாகும். இப்பாடல் இப்போது கன்னடம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகியுள்ளது.

அஜய் தேவ்கன் டிசம்பர் 24 அன்று இரவு 11:04 மணிக்கு, பாடலை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார். பிரபல திரைப்பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் (லியோ, விக்ரம், மாஸ்டர் புகழ்) பாடலை தனது சமூக ஊடகங்களில் பகிர்ந்து, அதன் முக்கியத்துவத்தை மேலும் அதிகரிக்கச் செய்திருக்கிறார்.

முன்னணி இளம் நட்சத்திர நடிகர் துருவா சர்ஜா, கேடி – தி டெவில் படத்தில், இதுவரையில் ஏற்றிராத மாஸ் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். அவரது கதாப்பாத்திரம் இந்தியா முழுவதும் உள்ள பார்வையாளர்களை ஈர்க்கும்படி அமைந்துள்ளது.

இப்படத்தின் “சிவ சிவா” பாடல் நாடு முழுவதும் உள்ள இதயங்களை வென்றுள்ளது. அதன் தாள துடிப்புகள், கிராமிய வசீகரம் மற்றும் பக்தி உணர்வு ஆகியவற்றுடன், “சிவ சிவ” ஒரு உண்மையான கொண்டாட்டமாகும். கன்னட நாட்டுப்புற கலாச்சாரம் மற்றும் மொழி எல்லைகளைத் தாண்டிய இசை அனுபவமாக இப்பாடல் அமைந்துள்ளது. KVN புரொடக்ஷன்ஸ் அனைவரையும் வசீகரிக்கும் நாட்டுப்புற கீதத்தில் மூழ்க அழைக்கிறது. இப்போது அனைத்து முக்கிய தளங்களிலும் இப்பாடல் ஸ்ட்ரீமிங்காகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *